குறைந்த விலையில் மொபைல் போன்களை வழங்கி, இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில் தனக்கென இடம் பிடித்து வரும் கார்பன் நிறுவனம், அண்மையில் ரூ. 10,290 விலையில், புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கார்பன் ஸ்மார்ட் ஏ 111 என அடையாளமிடப்பட்ட இந்த மொபைல் போனில், இரண்டு சிம் இயங்குகிறது. 5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் இயக்கம் கொண்ட திரை கிடைக்கிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் இயங்குகிறது.
ஆண்ட்ராய்ட் 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. பிளாஷ் கொண்ட, ஆட்டோ போகஸ் திறனுடன் கூடிய முன்புறக் கேமரா மிகச் சிறப்பாக இயங்குகிறது.
எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. 3ஜி, வை-பி, புளுடூத், A2DP இணைந்த புளுடூத் 2.1., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.
இதன் ராம் நினைவகம் 512 எம்.பி., உள் நினைவகம் 4ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 2,150mAh திறன் கொண்டது.
0 comments :
Post a Comment