தன் நிஞ்சா மொபைல் போன் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏ89 என்னும் மொபைல் போனை வெளியிட்டுள்ளது.
இது இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆகும். வர்த்தக விற்பனைக்கான இணைய தளங்களிலும், போன் விற்பனை மையங்களிலும் இது கிடைக்கிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ. 6,190. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே 3.97 அங்குல அகலத்தில் இந்த போனில் தரப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆண்ட் ராய்ட் 4.0 இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
டூயல் கோர் 1 GHz Mediatek MT6577 ப்ராசசர் போனை இயக்குகிறது. போகஸ் நிலைப்படுத்தப் பட்ட 3 எம்.பி. கேமரா தரப்பட்டுள்ளது. இதில் வீடியோ இயக்கமும் உண்டு.
512 எம்.பி. ராம் நினைவகம், 4ஜிபி ஸ்டோரேஜ் தரப்பட்டு இதில் பயனாளருக்கென 2.07 ஜிபி தரப்பட்டுள்ளது.
இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 3ஜி, புளுடூத் 2.1, வை-பி, ஜி.பி.எஸ். ஆகியவை நெட்வொர்க் இணைப் பிற்கு உதவுகின்றன.
3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இயங்கு கிறது. பேட்டரியின் திறன் 1,450mAh ஆக உள்ளது.
0 comments :
Post a Comment