பட்ஜெட் விலையில் மியூசிக் போன் வாங்க விரும்புபவர்கள் நோக்கியா 5250 மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். இது ஒரு 2ஜி சிம்பியன் ஸ்மார்ட் போன்.
இதில் 2.8 அங்குல டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. வீடியோ இயக்கத்துடன் டிஜிட்டல் ஸூம் கொண்ட 2 எம்பி கேமரா, 3,5 மிமீ ஆடியோ ஜாக், A2DP இணைந்த புளுடூத் , 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.எச்.சி. கார்ட் ஸ்லாட் ஆகியவை இந்த போனில் குறிப்பிடத்தக்கவை.
மேலும் இதில் உள்ள போன் புக்கில் எத்தனை முகவரிகளை வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் உள் நினைவகம் 52 எம்.பி. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதி, எம்.பி.4 மற்றும் எம்.பி.3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புஷ் மெயில், , அக்ஸிலரோ மீட்டர் சென்சார் மற்றும் பிற வழக்கமான வசதிகள் உள்ளன. இதன் பரிமாணம்
104 x 49 x 14 மிமீ. எடை 107 கிராம். இதன் பேட்டரி 1000 எம்.ஏ.எச். திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 450 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.
தொடர்ந்து 7 மணி 40 நிமிடம் பேச முடிகிறது. மியூசிக் கேட்பதாக இருந்தால், 24 மணி நேரம் தொடர்ந்து கேட்கலாம். இதன் அதிக பட்சவிற்பனை விலை ரூ.7,500.
0 comments :
Post a Comment