இரண்டு சிம் போன்கள் மார்க்கட்டிலும், மக்கள் மனதிலும், பயன்பாட்டிலும் நிலையாகிவிட்டதனால், அடுத்ததாக, மூன்று சிம் கொண்ட போன்களை, நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கிவிட்டன.
ஏற்கனவே இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று சிம் இயக்க போன் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. அது ஒரு சி.டி.எம்.ஏ. சிம் + இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது.
ஆனால் அகாய் ட்ரையோ, மூன்று ஜி.எஸ்.எம். சிம்கள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அகாய் போன்களை விற்பனை செய்திடும் 15 ஆயிரம் கடைகளில் இவை கிடைக்கும்.
அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,295 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் திரை 2.5 அங்குல அகலம் கொண்ட டி.எப்.டி. ஸ்கிரீனாக அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, விரும்பாத எண்களை தடை செய்திடும் வசதி, வீடியோ பிளேயர், சவுண்ட் ரெகார்டர், டார்ச் லைட், எப்.எம். ரேடியோ மற்றும் ஈக்குவலைசருடன் கூடிய ஆடியோ பிளேயர் ஆகியவை தரப்பட்டுள்ளன.
A2DPஇணைந்த புளுடூத், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் வசதிகளுடன் இந்த போன் இயங்குகிறது. மெமரியை இதன் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத்த முடியும். ஸ்பீட் டயலிங், கான்பரன்ஸ் கால், வரும் அழைப்பினை இயக்கத்தில் உள்ள இன்னொரு சிம்முக்கு மாற்றும் வசதி எனக் கூடுதல் வசதிகளும் தரப்படுகின்றன.
1100 mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் 5 மணி நேரம் பேச முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கிறது.
ஸென் எம் 111 இன்டெக்ஸ், அகாய் ஆகிய நிறுவனங்களை அடுத்து, ஸென் மொபைல்ஸ் நிறுவனமும், 3 சிம் இயக்கும் மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த மாடல் பெயர் எம் 111.
இதில் பயன்படுத்தக் கூடிய மூன்று சிம்களும் ஜி.எஸ்.எம். வகையைச் சேர்ந்தவகையாக இருக்க வேண்டும். இதன் திரை 2.4 அங்குல அகலம், வீடியோ ரெகார்டிங் திறன் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஆறு பேண்ட் ஈக்குவலைசர் கொண்ட மியூசிக் பிளேயர், இ-புக் ரீடர் (2.4 அங்குல திரையில் என்ன படிக்க முடியும்?) 8 ஜிபி வரை அதிகப் படுத்தக் கூடிய மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் டபிள்யூ. ஏ.பி., சப்போர்ட் எனப் பல அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.
இதில் உள்ள அம்சங்களைப் பார்க்கையில், ஒரு நிறுவனமே அகாய் மற்றும் ஸென் நிறுவனங்களுக்குத் தயாரித்துக் கொடுக் கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் ஸென் 3 சிம் மொபைல் சில்லரை விலை ரூ.3,499 எனக் குறிக்கப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment