இந்தியாவின் முனன்ணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், 'ஏர்டெல் மனி' என்ற பெயரில் நாட்டின் முதல் மொபைல் வாலேட் சேவையை துவக்கியுள்ளது.
இதுதொடர்பாக, ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்களது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர தொலைதொடர்பு சேவையை அளித்துவரும் தாங்கள், அவர்களுக்கு மேலும் ஒரு முத்தாய்ப்பான சேவையாக 'ஏர்டெல் மனி' சேவையை துவக்கியுள்ளது.
இதற்காக, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த சேவை, குர்கானில் துவக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, இதற்கான முனனேற்பாடுகளில் தங்கள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. காபி ஷாப்கள், ரெஸ்டாரெண்ட்கள் உள்ளிட்டவைகளுடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளோம்.
விரைவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்து சேவையை வழங்க உள்ளோம். முதற்கட்டமாக, குர்கானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற இடங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
தங்கள் வாடிக்கையாளர்கள், இந்த சேவையை பெற, க்னோ யுவர் கஸ்டமர் (கேஒய்சி) என்ற முறையை பரிசீலித்த பின், அவர்களது சிம் கார்டில், ஏர்டெல் மனி திட்டத்தின் படி மாற்றியமைக்கப்படும் என்றும், இதன்பின், அவர்கள் ரீடெயில் அவுட்லெட்களில் தாங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரீசார்ஜ் செய்து, பணத்தை கையில் வைத்துக் கொள்ளாமல், தாங்கள் வைத்துள் ஏர்டெல் சிம் மூலமே, தங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment