வாய்ஸ் அப்டேட்டிற்காக, ஏர்செல்லுடன் நிறுவனத்துடன் பேஸ்புக் கைகோர்த்துள்ளது. சமுகவலை இணைதளங்களில் ஜாம்பவானாகத் திகழும் பேஸ்புக், இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்செல்லுடன் இணைந்து வாய்ஸ் அப்டேட்டை வழங்குகிறது.
இதுகுறித்து, ஏர்செல் நிறுவன உயர் அதிகாரி குர்தீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதன்படி, ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்போனில் வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம் தங்களது குரலை பதிவு செய்து, பேஸ்புக்கில் அப்டேட் செய்தால், இந்த பதிவு, எஸ்எம்எஸ் மூலம், அவருடைய பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும்.
அவர்களும், இதே முறையில் அவருக்கு பதிலளிக்கலாம். இந்த சேவைக்கு இண்டர்நெட் பயன்பாடு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், பேஸ்புக்கில் சங்கமித்துள்ள நிலையில், இந்த கைகோர்ப்பு தங்கள் நிறுவனத்தின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
1 comments :
ஆச்சரியமான வளர்ச்சி! பகிர்வுக்கு நன்றி!
Post a Comment