அதிகம், ஆனா அதிகம் இல்லை


இந்த தலைப்பைப் பார்த்தவுடன், ""வரும், ஆனா வராது'' என்ற காமெடி டயலாக் நினைவிற்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த தலைப்பு ஒரு கவலை கொள்ளத்தக்க நிகழ்வு சார்ந்ததாகும். 

இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், இந்தியா, உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. 

ஆனால், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு கவலைப்படத்தக்க விஷயமாகும். 

இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. 

அதன்பின், சிறிது வேகமாகவே இந்த எண்ணிக்கை வளர்ந்தது. அண்மைக் காலத்திய கணக்கில், இது 12 கோடியாக இருந்தது. உலகின் மொத்த இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர்.

தற்போது, ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2012 இறுதியில் 2 கோடி ஸ்மார்ட்போன்கள் புழக்கத்தில், இணையப் பயன்பாட்டில் இருந்தன. 

2016ல், இது 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4ஜி அலைவரிசை இணைப்பு தருவதற்கு, அடிப்படைக் கட்டமைப்புகள் வேகமாக அமைக்கப்பட்டு வருவதால், இது இன்னும் உயரும் என எதிர்பார்க்கலாம். 

உலக அளவில், 270 கோடி மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். உலக மக்கள் தொகையுடன் இதனைக் கணக்கிடு கையில், இது 39 சதவீதம் ஆகும். ஆனால், இந்தியாவில் இது 11 சதவீதமாக மட்டுமே இருப்பது கவலைக்குரியது.

இந்த வகையில், சீன மக்களில், 40 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். இதுவே, பன்னாட்டளவில், அதிக பயன் பாட்டு விகிதம் ஆகும். அங்கு 51 கோடியே 10 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர். அமெரிக்காவில் 24 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவை அடுத்து, அதிகமாக இணையம் பயன்படுத்துவோர் வாழும் நாடு ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகும்.

ஒரு நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அதிக இணையப் பயன்பாடு உள்ள நாடு எது என்று பார்க்கையில், ஐரோப்பா மொத்தமாக 75 சதவீத பயன்பாட்டுடன் முதல் இடத்தைப் பெறுகிறது. அடுத்து அமெரிக்கா 61 சதவீதப் பயன்பாட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

உலக அளவில் ஆண்களே அதிகம் (41%) இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். பெண்களில் 37% பேர். உலக ஜனத்தொகையில் இது 103 கோடி பெண்கள் மற்றும் 105 கோடி ஆண்கள் எனக் கணக்காகிறது.


2 comments :

திண்டுக்கல் தனபாலன் at May 14, 2013 at 8:35 PM said...

இன்றைய நிலைக்கு இன்னும் குறைவதே நல்லது...

தகவல்களுக்கு நன்றிகள் பல...

கலியபெருமாள் புதுச்சேரி at May 15, 2013 at 10:12 AM said...

இந்தியாவில் இணைய அறிவு இல்லாமல் இருப்பதே நல்லதுதான்.இந்தியாவில் அதிகம்பேர் தவறான தளங்களைப்பார்த்து சீரழிவதற்கும் வெட்டி அரட்டைக்குமே பயன்படுத்துகின்றனர்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes