எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999.
நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 122.2 x 66.6x9.7 மிமீ. எடை 115.5 கிராம். பார் டைப் வடிவில் அமைந்துள்ள இதில், எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது.
இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 768 எம்பி ராம், 4 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.
நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்.பி.கேமரா இயங்குகிறது.
வீடியோ பதிவு நல்ல வேகத்தில் கிடைக்கிறது. டூயல் கோர் கோர்டெக்ஸ் ஏ 5 சிப் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் சிப்செட் தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் சென்சார் உள்ளன.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.1.2. ஜெல்லி பீன் ஆகும். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ்மெயில், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், டாகுமெண்ட் எடிட்டர், ஜி.பி.எஸ். ஆகியனவும் உள்ளன.
ஆர்கனைசர், கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு ட்யூப், கூகுள் டாக், வாய்ஸ் மெமோ, டயல் ஆகிய விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2460mAh திறன் கொண்டதாக உள்ளது.
0 comments :
Post a Comment