இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ், ஸ்மார்ட் போன் விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது.
அனைத்து தரப்பினரும் வாங்கும் விலையில், விரைவில் எட்டு புதிய ஸ்மார்ட் போன் மாடல்களை வெளியிட இருக்கிறது. இந்த ஆண்டு முடிவிற்குள், ஒரு மாத காலத்தில் விற்பனை செய்திடும் தன் மொபைல் போன் எண்ணிக்கையை 1.5 லட்சமாக உயர்த்திடவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சென்ற ஜூலையில் மட்டும் 67 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை மைக்ரோமேக்ஸ் விற்பனை செய்துள்ளது. இது எச்.டி.சி. மற்றும் கார்பன் நிறுவன மொபைல்களைக் காட்டிலும் அதிகமாகும். சைபர்மீடியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை வெகு வேகமாக உயர்ந்து வருகிறது.
2010 ஆம் ஆண்டில் 60 லட்சமாக இருந்த எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 12 லட்சமாக உயர்ந்தது. இது 87% வளர்ச்சியாகும். 2011ல், 30 நிறுவனங்கள் 150 ஸ்மார்ட் போன் மாடல்களை வெளியிட்டுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்மார்ட் போன் விற்பனையில், நோக்கியா 38%, சாம்சங் 28%, ஆர்.ஐ.எம்.(பிளாக்பெரி) 15% பங்கினைக் கொண்டுள்ளன.
இந்திய வாடிக்கையாளர்கள், எந்த மாடல் போனாக இருந்தாலும், போனின் விலையை தங்கள் தேர்வுக்கு ஓர் அடிப்படையாகக் கொண்டிருப்பதால், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை வெளியிடும் மைக்ரோமேக்ஸ், இந்த சந்தையில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று இந்நிறுவனத்தின் தீபக் மெஹ்ரோத்ரா அண்மையில் கூறியுள்ளார்.
2 comments :
Micromax - Models வித்தியாசமாக நிறைய வருகிறது... முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தகவலுக்கு நன்றி...
rate cheap soஅதுக்கு தக்க தான் இருக்கும்
Post a Comment