இந்தியாவில் இணைய பயன்பாட்டினை ஆய்வு செய்து வரும் காம் ஸ்கோர் நிறுவனம், அண்மையில் சமூக வலைத் தளங்கள் பயன்பாடு குறித்த முடிவுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் மொத்த நேரத்தில் நான்கில் ஒரு பங்கு நேரம் சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளது.
சென்ற ஜூன் மாதத்தில், இந்திய இணையத்தைப் பயன்படுத்தியவர்களில், 95% பேர் கூகுள் தளங்களைப் பயன்படுத்தி உள்ளனர். அடுத்த நிலையில், 25.2% பேர் சமூக வலைத் தளங்களில் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர்.
கூகுள் தளத்தைப் பயன்படுத்தியவர்கள் 5 கோடியே 78 லட்சம் பேர். இவர்கள் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். பேஸ்புக் தளத்தைக் கண்டவர்கள் எண்ணிக்கை 5 கோடியே 9 லட்சம் பேராவர்.
இது மொத்த இணையப் பயனாளர்களில் 83.4% பேராகும். அடுத்ததாக, யாஹூ தளத்தை 65.5% பேர்
பயன்படுத்தி உள்ளனர். மைக்ரோசாப்ட் தளத்திற்கு 48.1% பேர் வருகை புரிந்துள்ளனர்.
இந்த தளங்களுக்குச் சென்றவர்களில், அதிக நேரம் பயன்படுத்திய தளம் பேஸ்புக் தான். ஜூன் மாதத்தில், சராசரியாக நாளொன்றுக்கு 4 மணி நேரம் இந்த தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் தளங்களில் இது 2.5 மணி நேரமாக இருந்துள்ளது. கூகுள் தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட தளம் யு-ட்யூப் ஆகும்.
மேலே தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களில், பொது இணைய மையங்கள், மொபைல் போன்கள் மற்றும் பி.டி.ஏ சாதனங்கள் வழியாக இணையம் சென்றவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
1 comments :
அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...
Post a Comment