கூகுள் தேடல் சாதனம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து தேடல்களையும் இனி கூகுள் அக்கவுண்ட்டில் சேவ் செய்து வைக்கப்படும். அனைத்து பிரவுசர் வழியாகவும், அனைவராலும் மேற்கொள்ளப்படும் தேடல்கள் இந்த வகையில் பதியப்படுகின்றன.
இதுவரை கூகுள் சாதன தேடல்கள் அனைத்தும் குக்கீகளாக, ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குக்கீ பைல்களை, நீங்கள் சிகிளீனர் மற்றும் பிற அது போன்ற புரோகிராம் மூலம் நீக்கும் போது, அந்த தேடல்கள் கிடைக்காது.
ஏற்கனவே தேடப்பட்ட தேடல்கள் வேண்டும் எனில், இதற்கென கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதே கம்ப்யூட்டரில், வேறு ஒரு பிரவுசரில் தேடல்களை மேற்கொள்கையில் கூட, இவை கிடைக்காது. அப்படிக் கிடைக்கும் வகையில் செட்டிங்ஸில் மாற்றங்ளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்னை இனி இருக்காது. கூகுள் சென்ற வாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நம் தேடல்கள் அனைத்தும் நம் கூகுள் அக்கவுண்ட்டில் சேவ் செய்யப்பட்டு, நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கின்றன.
ஒவ்வொரு முறை அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்து, நாம் கூகுள் தேடல்களை மேற்கொள்கையில், தேடல்கள் அனைத்தும் அக்கவுண்ட்டில் சேவ் செய்யப்படுகின்றன.
இவை அடுத்த முறை, வேறு ஒரு பிரவுசர் வழியாக தேடல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அப்போதும் அவை அக்கவுண்ட்டில் சேவ் செய்யப்பட்டதிலிருந்து கிடைக்கின்றன.
அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்யப்படாமல் தேடல்களை மேற்கொண்டாலும் இவை கிடைக்கும். https://www.google.com/preferences என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இவை கிடைக்கும். இந்த தளத்தில், Safe Search filter மாற்றலாம்.
ஒரு பக்கத்தில் எத்தனை முடிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். பெர்சனல் தேடல்கள், தடை செய்யப்பட்ட தள முகவரிகள் குறித்தும் செட் செய்திடலாம்.
இது போல தேடல்களை கூகுள் அக்கவுண்ட்டில் சேவ் செய்து, பின்னர் மீண்டும் விரும்புகையில் கிடைக்கும்படி செய்திட வேண்டும் என்பது, கூகுள் வசதிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வெகு நாள் விருப்பமாகும். இந்த விருப்பத்தினை கூகுள் தளம் நிறைவேற்றியுள்ளது.
1 comments :
நல்ல தகவல்... பிற இடங்களில் ( பிரவுசர் ) தேடும் போது என்பது புது தகவல்... நன்றி...
Post a Comment