பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை என்பர் . இது போல் இன்றைய காலத்தில் போன் இல்லாதோருக்கு முன்னேற்ற வழி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நம்முடைய வாழ்வில் வர்த்தக ரீதியில் மொபைல் போன் முழு அங்கமாகி விட்டது.
இந்த பயன்பாட்டினால் நமக்கு நன்மை என்றாலும் நம்மை அறியாமலே நமக்கு பெரும் கேட்டினை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறந்து விடுகின்றனர். இதுவும் இன்றைய இளைய தலைமுறையினர் சக நேரமும் ஏன் தூங்கும் போதுகூட நெஞ்சிலே வைத்து தூங்குபவர்களும் உண்டு.
குறிப்பாக காதலன்- காதலி உரையாடல் என்றால் அது விடிய, விடிய போய்ச்சேரும் ( எடுத்துக்காட்டு பாலச்சந்தரின் அழகன் திரைப்படம்) இவ்வாறு நம்மை ஆட்டுவிக்கும் மொபைல் போன் தரும் தீமைகள் குறித்து மத்திய அரசே எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிக்கையில் மொபைல்போன் பயன்பாடு மற்றும் ரேடியேஷனில் இருந்து தப்பிக்க வழி கூறியிருக்கிறது. இதன் விவரம் வருமாறு :
மூக்கு கண்ணாடி அணிபவரா நீங்கள் ?
* போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது.
1 comments :
உண்மை தான்... ஊரில் பாதிக்கப்பட்டவர் தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார்... காது கொடுத்து கேட்டால் தானே... ...ம்... பாதிக்கப்படும் போது தெரியும்... நன்றி... நல்ல தகவல்கள்...
Post a Comment