நோக்கியா போன் விலை குறைப்பு

தன்னுடைய மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் சற்று குறைந்ததை அடுத்து, நோக்கியா அவற்றின் விலையை 8% முதல் 10% வரை குறைத்துள்ளது.

ஏற்கனவே தொடக்க நிலையில் பட்ஜெட் விலை போன்களாக வந்த போன்களும் இந்த விலை குறைப்பிற்குள் வந்துள்ளன.

குறிப்பாக நோக்கியா இ101, நோக்கியா இ200, நோக்கியா இ202 மற்றும் நோக்கியா இ203 ஆகியவற்றைக் கூறலாம்.

முதலில் இதன் ஸ்மார்ட் போன்கள் மாடல் 710 மற்றும் 800 ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டது.

சாம்சங், மைக்ரோமேக்ஸ், இன்பார் மடிக்ஸ், கார்பன் மொபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை அடிப்படையில் கொடுத்த கடுமையான போட்டியை அடுத்து இந்த விலை குறைப்பினை நோக்கியா அமல்படுத்தியுள்ளது.

இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில் தான் ஏற்கனவே கொண்டிருந்த விற்பனைப் பங்கு தொடர்ந்து சரிந்ததை அடுத்து நோக்கியா இந்த முடிவினை எடுத்தது.

இதே போல சில வாரங்களுக்கு முன், பிளாக் பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனமும் இதே விலை குறைப்பு பாணியை பின்பற்றியது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes