சாம்சங் கேலக்ஸி எஸ் 3 முன்பதிவு

சாம்சங் கேலக்ஸி எஸ் 3 முன்பதிவுமொபைல் விற்பனையில் சாம்சங் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. அண்மையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்3 வாங்குவதற்கு முன்பதிவு வரவேற்கப்பட்டது.

இது 90 லட்சம் என்ற எண்ணிக்கையை மே முதல் வாரத்திலேயே தாண்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 145 நாடுகளில் 290 நிறுவனங்கள் தங்களுக்கென ஆர்டர் செய்த போன்களின் எண்ணிக்கையும் அடக்கம்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், மிக அதிகமான ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்த நிறுவனமாக சாம்சங் இடம் பெற்றது.

இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்த மொபைல் போனுக்கான முன் பதிவுகள் சாம்சங் இ ஸ்டோரில் வரவேற்கப்படுகின்றன.

https:// www.samsungindiaestore.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதற்கான தகவல்கள் தரப்பட்டுள்ளன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes