தன் தேடல் சாதனத்தில் கூடுதல் வசதியாக, தன் பிரவுசர் ஒன்றை ஆக்ஸிஸ் என்ற பெயரில் யாஹூ வழங்கியுள்ளது. இது ஒரு தனி பிரவுசர் இல்லை; ஏற்கனவே பயனாளர் பயன்படுத்தும் பிரவுசரில் ஒரு ப்ளக் இன் சாதனமாய் இயங்குகிறது.
ஐ--பேட் மற்றும் ஐ-போனில் பயன்படுத்த தனிப் பதிப்பு தரப்படுகிறது. குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் சபாரி பிரவுசர்களுக்கான ஆக்ஸில் ப்ளக் இன் கிடைக்கிறது.
இது என்னவெனப் பார்க்கலாம்? பயனாளர் ஒருவர், தேடலை மேற்கொள்கையில், தேடல் முடிவுகள் பட்டியல்களாகப் பக்கம் பக்கமாகக் கிடைக்கின்றன. இவற்றில், பயனாளர் மீண்டும் ஒரு தேடலை நடத்தித் தான் விரும்பும் தளத்திற்கான லிங்க்கில் கிளிக் செய்கிறார்.
இந்த அலைச்சல் ஆக்ஸிஸ் பிரவுசரில் இல்லை. தேடல் முடிவுகள், அந்த தளங்களின் முன் பக்கங்களின் தம்ப் நெயில் படங்களாக, ஒரே திரையில், நெட்டு வரிசையில், அதிக எண்ணிக்கையில் காட்டப்படுகின்றன.
இவற்றைப் பார்த்து, தான் தேடிய தளத்தினைக் கண்டறிந்து கிளிக் செய்து ஒருவர் எளிதாகச் செல்ல முடியும். எனவே தேடலுக்கான கேள்வி, முடிவுகள், தளம் செல்லல் என மூன்று எளிய நிலைகளில் பயனாளர் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறார்.
இதுவரை யாஹூ தன் தேடல் தளத்திற்கான செலவினை, இதில் காட்டப்படும் விளம்பரங்களிலிருந்து பெறப்படும் நிதியி லிருந்து சரி செய்து வந்தது; லாபம் பார்த்தது. இப்போது புதிய முறையில் ஆக்சிஸ் இயங்குவதால், அதில் விளம்பரங்கள் இல்லை. பயனாளர்கள் விருப்பம் மற்றும் நலனுக்காக, தன் வருமானத்தை யாஹூ விட்டுள்ளது பாராட்டத்தக்கது.
யாஹூ தேடல் தளத்தினை 70 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான யாஹூ டூல் பார் ஒன்று வழங்கப்பட்டு தனி அடையாளத்துடன் இயங்குகிறது. இதனை 8 கோடி பேருக்கு மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, ஆக்சிஸ் பிரவுசரையும் தன் வாடிக்கையாளர்களிடம் எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என யாஹூ திட்டமிடுகிறது.
இப்போது மொபைல் வழி இன்டர்நெட் பயன்பாடு பெருகி வருவதால், இந்த ஆக்சிஸ் பிரவுசர் திட்டத்தில், மொபைல் சாதனங் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, யாஹூ செயல்பட்டுள்ளது.
டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான பதிப்பு களை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனமும் இதனை வரவேற்றுள்ளது. ஏன் எனில் அதன் சபாரி பிரவுசருக்கான அடிப் படைக் கட்டமைப்பினையே, யாஹூ பயன்படுத்திவருகிறது.
ஆக்சிஸ் பிரவுசர், மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இது மொபைல் சாதனத்தில் மிக முக்கியமான, புதிய அம்சங்களைக் கொண்ட தேடல் சாதனமாக உருவெடுக்கும் என இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் பட்ராஸ்கி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment