சென்ற வாரம் மைக்ரோசாப்ட் தன் வலை மனைச் செய்தியில், வர இருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ரீபூட் ஆகும் பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டதாகவும், இனி சிஸ்டம் தானாக, சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம், ரீ பூட் ஆகாது என்றும் அறிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை விண் டோஸ் 8 உணர்ந்து, அதனைச் சரி செய்திட தரும் ஆப்ஷன்களை ஒரு மெனுவாகப் பட்டியலிடும். அதில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரி செய்தல், ரீ பூட் செய்தல் உட்பட, சாப்ட்வேர் தொகுப்பின் பிரச்னைக்கேற்றபடி ஆப்ஷன்கள் தரப்படும்.
இதற்கு மைக்ரோசாபட் முன்பு சந்தித்த சில பிரச்னைகளே காரணம் ஆகும். 2008 ஆம் ஆண்டில், விண்டோஸ் விஸ்டாவிற்கென சர்வீஸ் பேக் 1 வழங்கப்பட்டபோது, விஸ்டா தொடர்ந்து பல முறை ரீபூட் செய்த வண்ணம் இருந்தது.
இதே பிரச்னை, 2009 ஆம் ஆண்டில், வாடிக்கையாளர்கள் விஸ்டாவி லிருந்து விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்கையிலும் நடைபெற்றது. இரண்டாவது நிகழ்வு, பெரும்பாலும் ரூட்கிட் வைரஸ் பாதித்த விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களிலேயே ஏற்பட்டது என்பதும் கண்டறியப்பட்டது.
இதனால்தான், இந்த தானாகவே ரீபூட் ஆகும் சமாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன்கள் அடங்கிய மெனுவினைத் தரும் வசதி ஒன்றை விண்டோஸ் 8 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் தந்துள்ளது.
இதிலிருந்து சிஸ்டம் பழுது பார்த்தல் அல்லது மீட்பு வேலை மற்றும் மீண்டும் பூட் செய்தல் என விருப்பப்படுவதனை மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது.
மேலும் இன்னொரு கூடுதல் வசதியும் தரப்பட்டுள்ளது. இருமுறை பூட் செய்திடும் வகையில் சிஸ்டம் செயல்பட்டால், உடனடியாக விண்டோஸ் 8, Windows Recovery Environment (RE) என்ற ஒரு டூலை இயக்கத் தொடங்கும்.
இதன் மூலம் பிரச்னையை ஆய்வு செய்து அதற்கேற்ப சரி செய்திடும் பணிகளுக்கான வேலை மேற்கொள்ளப்படும். இந்த டூல் விஸ்டா சிஸ்டம் முதல் தரப்பட்டு வருகிறது.
மேலும் விண்டோஸ் 8 சிஸ்டம் பூட் ஆவதற்குக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுவதால், இடையே அதனை நிறுத்திக் கண்காணிக்க, R (Del F8/F2 /Pause போன்ற) அழுத்துவது என்பது இயலாத ஒன்றாக ஆகிவிட்டது.
விண்டோஸ் 8, முந்தைய சிஸ்டங்களைக் காட்டிலும் 30% முதல் 70% வரை வேகமாக பூட் ஆகிறது.
0 comments :
Post a Comment