மறையும் விண்டோஸ் எக்ஸ்பி

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த பின்னரும், பன்னாட்டளவில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர் களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது இது படிப்படியாகக் குறைந்தாலும், 50%க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால், அண்மையில் அமெரிக்காவில் "ஸ்டார் கவுண்ட்டர்' என்னும் ஆய்வு அமைப்பு எடுத்த ஒரு கணிப்பின்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு, எக்ஸ்பியைக் காட்டிலும் கூடுதலாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில், விண்டோஸ் எக்ஸ்பி 30.7% மற்றும் விண்டோஸ் 7 பயன்பாடு 32.2% எனக் கண்டறியப் பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் உறுதியாக எதிர்பார்ப்பது போல, மக்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் முழுமையாக மாறுவார்கள் என்றே தெரிகிறது.

சென்ற ஜனவரி மாத இறுதியில், 30 கோடி விண்டோஸ் 7 சிஸ்டம் உரிமங்களை விற்பனை செய்ததாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஸ்டார் கவுண்ட்டர் கணக்குப்படி, விஸ்டா 19.5% மக்களாலும், ஆப்பிள் மேக் ஓ.எஸ். 14.8% மக்களாலும் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், பன்னாட்டளவில் பார்க்கையில் விண்டோஸ்7, மொத்தத்தில் 31.5% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எக்ஸ்பி 46.8 % பயன்பாட்டினைக் கொண்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில், சீன கம்ப்யூட்டர் பயன்பாடு, முடிவுகளை முடிவு செய்வதாக அமைகிறது.

அங்கு அதிகப் படியான எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயக்கத்தில் உள்ளது.

தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6-னை புதைத்துவிடுங்கள், விட்டு விடுங்கள் என்று கூறும் மைக்ரோசாப்ட், விண்டோஸ் எக்ஸ்பி குறித்து அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்றும், மாறுவதே நல்லது என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.


1 comments :

முனைவர் இரா.குணசீலன் at May 23, 2011 at 9:48 AM said...

விஸ்டா பயன்படுத்திய நான் மீண்டும் எக்ஸ்பியையே விரும்பிப்ப பயன்படுத்தி வருகிறேன்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes