2 வது முறை தப்பித்தார் கனிமொழி

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள கனிமொழியை ஜாமினில் விடுவதா அல்லது நீதிமன்ற காவிலில் வைப்பதா என சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி ஓ.பி., சைனி இன்று தீர்ப்பளிக்க இருந்தார்.


இந்நிலையில் இன்று இது தொடர்பான உத்தரவை வரும் 20 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். ஏற்னவே கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கு 14 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது இதுவரை இவர் கைது செய்யப்பட மாட்டார் என்ற நிம்மதியில் தி.மு.க., இருந்தது.


இன்றாவது ஜாமின் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க., இருந்த நேரத்தி்ல் இந்நிலையில் இன்று 2 வது முறை கோர்ட் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.


கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இவர் கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.



இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறினார். இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார்.


இன்று ஜாமின் கிடைக்குமா அல்லது நீதிமன்ற காவலில் வைக்கப்படுவாரா என்பதற்கு இன்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


கனிமொழிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்றும் பெண் என்பதால் இவரை ஜாமினில் விட வேண்டும் என்றும் ராம்ஜெத்மலானி வாதாடினார்.


சி.பி.ஐ.,வக்கீல் லலித் தனது வாதத்தில் ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்த காரணத்தினால் ரூ. 214 கோடி பரிமாற்றம் நடந்தது என்றும் இவரை ஜாமினில் விடக்கூடாது என்றும் வாதிட்டனர் .


இது குறித்த தீர்ப்பை நீதிபதி இன்று அளிக்கவிருந்தார். இன்றைய தீர்ப்பு தி.மு.க.,வுக்கு கூடுதல் அடியாக விழும், இதனால் தோல்வியில் இருந்து மீளாத தி.மு.க., கனிமொழியை எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி எழுந்தது.


இதனையடுத்து இந்த மனு தொடர்பான தீர்ப்பு வரும் 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று ஜாமின் தொடர்பான ஆர்டர் ரெடியாகவில்லை என்றும் இதனால் தள்ளி வைக்‌கப்படுகிறது என்றும் சி.பி.ஐ., வக்கீல் தெரிவித்தார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes