இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்4 போனை, 27ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஏர்செல் நிறுவன இயக்குனர் சந்தீப் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் 13 சர்க்கிள்களில் 3ஜி சேவையை வழங்க அனுமதி பெற்றுள்ள தங்கள் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன்4 போனை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.
இத்னமூலம் 3ஜி சேவையின் உன்னதத்தை தங்கள் வாடிக்கையாளர்கள் பெற உள்ளார்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் மற்றும் வகையில் இந்த போனையும், 3ஜி சேவையையும் அளிக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.
இந்தியாவில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டின் இறுதி்க்குள், 12 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனமும், அதேதினத்தில், ஐபோன்4 போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் (162 மில்லியன்) முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. (ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 55 மில்லியன்).
மார்ச் மாத கணிப்பின்படி, சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் தொலைதொடர்புக்கு அதிக வாடிக்கையாளர்கள் (811.59 மில்லியன்) உள்ளனர்.
ஐபாட், ஐபேட், ஐபோன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவில் கடந்தாண்டே ஐபோன்4 போனை அறிமுகப்படுத்தியது. இந்த போனின் ஆரம்ப நிலை விலை 199 அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
1 comments :
super cary on
Post a Comment