இந்தியாவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள டிவிசி ஸ்கைஷாப் நிறுவனம், இம்மாத இறுதியில் நெட்புக்கை ரூ. 7 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
தற்போதைய அளவில், ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நெட்புக்குகளை காட்டிலும், தங்களது நெட்புக்குகள், விலை குறைந்தது மட்டுமல்லாமல், அதைவிட மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டிருப்பதாகவும், இதன்மூலம், மாணவர்கள், விற்பனை பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உள்ளிட்டோர்களை கவரும் என்பதில் ஐயமில்லை என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டிவிசி ஸ்கைஷாப் நிறுவன தலைவர் வினோத் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தற்போது மக்களிடையே, லேப்டாப்பின் மோகம் அதிகரித்திருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டே, தாங்கள் நெட்புக் விற்பனையை துவக்கியிருப்பதாகவும், தாங்கள் வெளியிட்டுள்ள நெட்புக்கின் எடை 1 கிலோவிற்கும் குறைவு தான் என்றும்,
இந்தியாவில், தங்கள் நிறுவனத்திற்கு 450க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் உள்ளதாகவும், இதன்மூலம், நாட்டின் எந்த பகுதிக்கும் 6 மணி நேரத்தில் தங்களால் டெலிவரி செய்ய முடிகிறது என்றும், தங்களின் நெட்புக்கிற்கு 6 மாத கால வாரண்டி அளிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹை-எண்ட் டச் ஸ்கிரீன் மொபைல்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதன் விலை ரூ. 5,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கேம்கார்டரின் விலை ரூ. 3,990 ஆக விற்பனை செய்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments :
அருமையான தகவல் வாழ்த்துக்கள்...
சந்தைக்கு வந்ததும் மறக்காமல் பதிவு மூலமா தெரிவியுங்கள்
Post a Comment