இரு வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் போன் 7 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது.
வேகமாக வளர்ந்து வரும் மொபைல் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் பெரிய அளவில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கொரு இடத்தைப் பிடித்துத் தரும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
நவம்பர் முதல் வாரத்தில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் போன்கள் அமெரிக்காவில் கிடைக்கும். பின்னர் மற்ற நாடுகளிலும் இந்த சிஸ்டத்துடன் கூடிய போன்கள் விற்பனைக்கு வரலாம். எல்.ஜி., சாம்சங், எச்.டி.சி., டெல் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் ஒன்பது மாடல் ஸ்மார்ட் போன்கள்.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்படும் என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பால்மர் தெரிவித்தார்.
மற்ற போன்கள், குறிப்பாக ஐபோன் மாடல்களிலிருந்து, விண்டோஸ் மொபைல் 7 சிஸ்டம் கொண்ட மாடல்கள் தனித்துத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆப்பரேட் டிங் சிஸ்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப போனை வடிவமைத்துக் கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன.
மியூசிக் மற்றும் வீடியோ பைல் பயன்பாடு, பிங் தேடல் சாதனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் நோட் சாப்ட்வேர், எக்ஸ் பாக்ஸ் கேம்ஸ் போன்ற பல வசதிகள் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயக்கக் கிடைக்கும்.
0 comments :
Post a Comment