தன் அடுத்த பிரவுசரான பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியீடு அடுத்த ஆண்டிற்குத் தள்ளிப் போகும் என மொஸில்லா அறிவித்துள்ளது. இதன் சோதனைத் தொகுப்பு 7, பல சோதனைக்குள்ளானதால், இந்த முடிவினை மொஸில்லா எடுத்துள்ளது.
இந்த சோதனைகள் எதிர்பாராமல் ஏற்பட்டுள்ளதால், அவற்றை சரி செய்திட கூடுதல் நாட்கள் தேவைப்படுவதனை உணர்ந்து, மொஸில்லா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சென்ற செப்டம்பர் மாத மத்தியில் சோதனைத் தொகுப்பு 7ஐ வெளியிட மொஸில்லா திட்டமிட்டது.
ஆனால், பல பிரச்னைகளைச் சந்தித்ததாலும், அவற்றிற்கான தீர்வுகளை அமைக்க நாட்கள் தேவைப்பட்டதாலும், இந்த சோதனைத் தொகுப்பும் தாமதப்படுத்தப் படுகிறது.
இனி, பயர்பாக்ஸ் பதிப்பு 4ன் இறுதித் தொகுப்பிற்கு முந்தைய வெளியீடுத் தொகுப்பு, 2011 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியிடப்படலாம். சோதனைத் தொகுப்புகள் டிசம்பரில்
கிடைக்கலாம்.
பொதுவாகவே, மொஸில்லா தன் பிரவுசர்கள் வெளியிடும் கால அட்டவணையை, திட்டமிட்டபடி பின்பற்றுவதில்லை. தற்போதைய பதிப்பான 3.6, ஜனவரி 2010க்குத் திட்டமிடப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னரே வெளியானது.
சென்ற மாதம், தான் திட்டமிட்ட சில வசதிகளை பயர்பாக்ஸ் பதிப்பு 4ல் இருந்து நீக்க எண்ணியது. ஆனால் இப்போது கால நீட்டிப்பு இருப்பதால், அவையும் தரப்படலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
0 comments :
Post a Comment