இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா டொகாமோ நிறுவனம், மகாராஷ்டிரா சர்க்கிளில் 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவன தலைவர் பங்கஜ் சேத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச அளவில் சிறந்து மற்றும் முன்னணியில் திகழும் டாடா குழுமம், தொலைதொடர்பு துறையிலும் மக்களிடையே 3ஜி சேவையை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுவதாகவும், இதன்மூலம், மக்களிடையே, தங்கள் நிறுவனத்தின் மீதுள்ள மதிப்பு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : என்டிடி டொகாமோவின் உதவியுடன் தங்கள் நிறுவனம் 3ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும்,
இதன்மூலம், 21.1 எம்பிபிஎஸ் வேகத்திலான இண்டர்நெட் வசதியை பெற முடியும் என்றும் அதேபோல், ஹை-டெபனீசன் வாய்ஸ் (ஹெச்டி வாய்ஸ்) வசதியையும் தங்கள் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments :
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
ஃஃஃஃஃஃ21.1 எம்பிபிஎஸ்ஃஃஃஃஃ
இது உண்மையா... இலங்கையிலும் 1 mbps என்று சொல்லுறாங்கள்.. ஆனால் 55 kbps கடக்காது...
Post a Comment