வீடியோகான் மொபைல் போன்களில் பேஸ்புக் இலவசம்

சோஷியல் நெட்வொர்க் தளமான பேஸ்புக் தளத்தில் இலவசமாகச் சென்று உலவும் சேவையினை, வீடியோகான் மொபைல் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். 

இதற்கான ஒப்பந்தம் அண்மையில் இரண்டு நிறுவனங் களுக்கிடையே மேற்கொள்ளப் பட்டது. பேஸ்புக் தளம் மூலம், எந்த மொபைல் வெப் பிரவுசர் வழியாகவும் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும். 

தங்கள் நண்பர்களுடன், சமூக உறவுகளை ஏற்படுத்தவும், புதுப்பித்துக் கொள்ளவும் விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த சேவை 0.facebook.com என்ற தளத்தின் மூலம் கிடைக்கிறது. இந்த தளம் அதிக வேகத்தில் செயல்படக்கூடியது. 

இதில் படங்கள் மற்றும் கிராபிக்ஸ் எதுவும் இருக்காது. பேஸ்புக்கில் வெளியாகும் படங்களைப் பார்க்க விரும்புவோர், இந்த தளத்தை விட்டு வெளியே வந்து, அதற்கான கட்டணம் செலுத்திப் பார்க்க வேண்டும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes