அல்காடெல் தரும் புதிய மொபைல்

இசையை ரசிக்க விரும்பும் இளைஞர்களைக் குறி வைத்து, மிக அழகான வண்ணக் கலவையில், சிகப்பும் கருப்பும் இணைந்து, பல்வேறு வசதிகளுடன், அல்காடெல் மொபைல் போன் விற்பனைக்கு வெளிவந்துள்ளது. அல்கா டெல் ஐ.சி.இ.3 என அழைக்கப்படுகிறது. 

எளிமையாகவும் வேகமாகவும் டெக்ஸ்ட் அமைத்திடும் வகையில் குவெர்ட்டி கீ போர்ட், ஒரே நேரத்தில் பலருக்கு செய்தி அனுப்ப இன்ஸ்டன்ட் மெசஞ்சர் கிளையண்ட், பி.ஓ.பி.3 மின்னஞ்சல், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் மை ஸ்பேஸ் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்கான தொடர்புகள், 2.4 அங்குல அகலத்தில் வண்ணத்திரை, 2 எம்பி கேமரா, இமேஜ் எடிட்டர், வீடியோ ரெகார்டர், எம்பி3 பிளேயர், ஆர்.டி.எஸ். இணைந்த எப்.எம். ரேடியோ, 35 மணி நேரம் தொடர்ந்து இசை கேட்க வசதி, 80 எம்.பி. நினைவகம், மைக்ரோ எஸ். டி.கார்ட் மூலம் 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, 

நெட்வொர்க் இணைப்பிற்குEDGE, GPRS Class 12, WAP 2.0, A2DP இணைந்தBluetooth,Stereo 2.0  எனப் பலவகை வசதிகளைக் கொண்டதாக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் பேசும் திறன் கொடுத்து, 450 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் பேட்டரி இதில் தரப்படுகிறது. 

புதுமையான முறையில் வடிவவைப்பு செய்து வழங்கிய தற்காக, இந்த மாடல் போனுக்கு 2010 ஆம் ஆண்டுக்காண சி.எம்.ஏ.ஐ. நேஷனல் டெலிகாம் விருது வழங்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த போனின் விலை ரூ. 6,600.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes