விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் இரு வகையாக ''மொபைஜெனி'' என்னும் பயனுள்ள சாப்ட்வேர் அப்ளிகேஷன் தரப்படுகிறது.
இந்த அப்ளிகேஷன் புரோகிராம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம் ஆக இருக்குமோ என்று பலர் சந்தேகப்படுகின்றனர். இரு வகை சிஸ்டங்களில் இயங்கும் வகையில் தரப்படுவதால், அவ்வாறான தன்மை கொண்டதாக இருக்காது
எனப் பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்ட் இயங்கும் மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் பயன்களும் அதிகம். இது குறித்து இங்கு பார்க்கலாம்.
1. மொபைல் போன் / டேப்ளட் பி.சி. கம்ப்யூட்டருடன் இணைப்பு: மொபைஜெனி சாப்ட்வேர் அப்ளிகேஷனின் முக்கிய செயல்பாடு, பெர்சனல் கம்ப்யூட்டருடன் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போனை இணைத்து, பைல்களை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்வதுதான்.
இதனை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கியவுடன், அந்த கம்ப்யூட்டருடன் ஏதேனும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன் அல்லது டேப்ள்ட பி.சி. யை உடன் அடையாளம் கண்டு கொள்கிறது. உடன், படங்கள், வீடியோ படங்கள், இசை கோப்புகள் ஆகியவற்றை இரண்டிற்கும் இடையே பரிமாறிக் கொள்ள உதவுகிறது. அத்துடன் நாம் சேவ் செய்து வைத்திருக்கும் டேட்டாவிற்கான முழுமையான பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளவும் செய்கிறது.
2. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் மொபைல் போனுக்கான சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து, பின்னர், உங்கள் போனுக்கு அல்லது டேப்ளட் பி.சி.க்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
3. உங்களுடய போனில் நூற்றுக்கணக்கான தொடர்பு முகவரிகள், போன் எண்கள் உள்ளனவா? உங்களால், அவற்றைப் பராமரிக்க முடியவில்லையா? இந்த சாப்ட்வேர் மூலம், அவற்றை வரிசைப்படுத்தலாம், எடிட் செய்திடலாம், நீக்கலாம்; புதியவற்றை இணைக்கலாம்.
4. உங்களுடைய கம்ப்யூட்டருடன் மொபைல் போனை இணைத்துவிட்டால், அதில் வந்து சேர்ந்திருக்கும் மெசேஜ்களை, பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்தவாறே படிக்கலாம், நீக்கலாம்.
இவ்வாறு பலவகைகளில், கம்ப்யூட்டருக்கும் மொபைல் போனுக்கும், டேப்ளட் பி.சி.க்கும் இடையே ஒரு பைல் மேனேஜராக இந்த மொபைஜெனி (Mobogenie) செயல்படுகிறது.
இருப்பினும் ஏன் இதனை மால்வேர் எனப் பலர் சந்தேகப்படுகின்றனர். முதல் காரணம், இது நம் மொபைல் போனில் உள்ள நம் பெர்சனல் தகவல்களை எடுத்துப் பயன்படுத்துவது.
இரண்டாவதாக, நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மொபைஜெனி இயங்கத் தொடங்கியவுடன், அதனை மால்வேர் என அறிவித்து, இயக்கவா? என்ற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறது.
எனவே, இதன் மூலம் நீங்கள் பரிமாறிக் கொள்ளாத பைல் ஏதேனும் இருந்தால், அதனை நன்றாகச் சோதனை செய்து உடனே நீக்கிவிடவும்.இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் Custom installation என்ற வகையில் இன்ஸ்டால் செய்திடவும்.
கண்களை மூடிக் கொண்டு, நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என அடுத்து அடுத்து கிளிக் செய்திட வேண்டாம். மொத்தத்தில், இது நல்ல பயன்களைத் தந்தாலும், சற்று அச்சம் தரும் வகையில் செயல்படுகிறது என்பது உண்மையே. ஆனால், இது மால்வேர் என இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
1 comments :
நீங்கள் தொழில்நுட்ப அல்லது அறிவியல் தகவல் பற்றி வலைப்பூ வைத்துள்ளீர்களா?
உங்கள் தளத்தை தானியங்கி திரட்டியில் இணையுங்கள்.
இதன் மூலம் உங்கள் தளத்தின் புதிய பதிவு தானியங்கி முறையில் அப்டேட் செய்யப்படுவதுடன் பதிவு நிறைய பேரை சென்றடையும்.
உங்கள் தளத்தை இணைக்க
http://tamil-tech-feeds.blogspot.com/
Post a Comment