கூகுள் தன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, கட்டணம் செலுத்தி வீடியோவினைத் தன் தளத்தில் பார்க்கும் வசதியினைத் தர இருக்கிறது.
இதனால், திரைப்படங்கள் நகலெடுக்கப்பட்டு பார்க்கப்படும் தீமை ஒழியும் என கூகுள் நம்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த கட்டணச் சேவையினை கூகுள் படிப்படியாக சில நாடுகளில் வழங்கி வருகிறது.
கடந்த ஆறு மாதங்களில், ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பானில் இந்த சர்வீஸ் தொடங்கப்பட்டது.
இந்த சேவையில், பல நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துடன் கூட்டாகச் செயல்படும்.
இந்தியாவில் ஏற்கனவே கூகுளின் கூட்டாளியாக இயங்கும் ஈராஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், கூகுள் தளத்தில் தன் படங்களை வைத்துள்ளது.
இந்த சேவை தொடங்கப்பட்டவுடன், இன்னும் பல நிறுவனங்களுடன் கூகுளுடன் இணைய ஆர்வம் கொள்ளும். தற்போதைக்கு இந்த கட்டணத்தை வசூல் செய்வதில் மட்டுமே சில சிக்கல்கள் இருப்பதாகவும், விரைவில் அவை தீர்க்கப்பட்டு சேவை தொடங்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
பல நிகழ்ச்சிகளின் வீடியோவினைக் கேட்டுப் பெற்று பார்க்கும் பழக்கம் வெளிநாடுகளில் மக்களிடையே பல ஆண்டுகளாக உள்ளது. பலரும் படங்களைப் பார்க்க இந்த வழியினையே விரும்பி, பார்த்து மகிழ்கின்றனர்.
இங்கு அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர், இப்பழக்கத்தினை மக்கள் ஆர்வமாக மேற்கொள்ளத் தொடங்குவார்கள் என கூகுள் நிறுவன ஆசிய பசிபிக் பிரிவின் இயக்குநர் கௌதம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment