வேர்ட் டாகுமெண்ட்டில் பேக் கிரவுண்ட்

நாம் உருவாக்கும் ஆவணங்களில், அதனைப் படிப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நிறைய நகாசு வேலைகளை மேற்கொள்ள வேர்ட் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது.

எடுத்துக்காட்டாக, வேர்ட் டாகு மெண்ட் ஒன்றில், கிராபிக்ஸ் அமைக்கலாம்; வேர்ட் ஆர்ட் மூலம் சொற் களை அல்லது தலைப்புகளை பல வடிவங்களில் ஏற்படுத்தலாம்.

நீங்கள் உங்கள் டாகுமெண்ட் ஒன்றினை இணையப் பக்கத்தில் அமைத்துக் காட்ட திட்டமிடுகிறீர்கள் எனில், அதற்கு ஒரு பின்னணித் தோற்றத்தினை வண்ணத்தில் உருவாக்கலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பிற்கு முன் வந்த தொகுப்பினைப் பயன்படுத்துவோராக இருந்தால், கீழ்க் குறித்தபடி செட் செய்திடவும்.

1. முதலில் Format மெனு சென்று அதில் Background என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இங்கு, வண்ணங்கள் அமைந்த ஒரு கட்டத்தினையும், மேலும் சில ஆப்ஷன்களையும் காட்டும்.

2. இங்கு நீங்கள் அமைக்க விரும்பும் பின்னணித் தோற்றத்திற்கான வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் Page Layout டேப் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும். இங்கு கிடைக்கும் Page Background குரூப்பில் Page Color என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இப்போது மேலே குறிப்பிட்டபடி வண்ணங்கள் அமைந்த ஒரு கட்டமும், சில ஆப்ஷன்களும் கிடைக்கும். விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது வேர்ட் தானாகவே, Web Layout view வகைக்கு மாறிக் கொள்ளும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணம் டாகுமெண்ட்டிற்கான பின்னணியில் காட்டப்படுவதனைக் காணலாம். வேறு எந்த வகை வியூவிலும் இந்த பேக் கிரவுண்ட் வண்ணம் காட்டப்படாது என்பதனை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

வேர்ட் 2007ல் பேக் கிரவுண்ட் வண்ணம் Layout மற்றும் Web Layout வியூக்களில் கிடைக்கும். எனவே, நீங்கள் பேக் கிரவுண்ட் வண்ணம் காட்டப்படாத வியூ விற்கு மாறினால், ஆவணமானது, எப்போதும் போல எந்தப் பின்னணியும் இன்றிக் காட்டப்படும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணப் பின்னணியினை நீக்க வேண்டும் எனில், முன்பு குறிப்பிட்டது போலச் சென்று, வண்ணங்கள் அடங்கிய கட்டத்தினைப் பெற்று, “No Fill” or “No Color” என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த வண்ணத் தோற்றத்தின் பின்னணியுடன் வேறு படம் அல்லது சொற்களையும் அமைக்கலாம். வண்ணக் கட்டத்தின் கீழாக இதற்கெனக் கொடுத்துள்ள ஆப்ஷன்களில் விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து அமைக் கலாம். உங்கள் போட்டோ, சிறிய படங்கள், நிறுவனச் சின்னங்கள், சொற்கள் என எதனையும் அமைக்கலாம். உங்கள் கற்பனை எல்லைதான் இதற்கும் எல்லை என, இதனைப் பயன்படுத்துகையில் தெரிந்து கொள்வீர்கள்.


1 comments :

krishy at May 15, 2012 at 12:40 AM said...

வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes