விண்டோஸ் கீ : தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.
விண் கீ + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.
விண் கீ +Tab : மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.
விண் கீ + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.
விண் கீ + H:ஷேர் சார்ம் கிடைக்கும்.
விண் கீ + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.
விண் கீ + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும்.
விண் கீ + F:பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும்.
விண் கீ + W : செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.
விண் கீ + P : செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.
விண் கீ + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற
விண் கீ + X:விண்டோஸ் டூல் மெனு பார்க்க
விண் கீ +O:ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட
விண் கீ + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல
விண் கீ +Shift + . : ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல
விண் கீ +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக் (Toasts/Notifications) கொண்டு வர
விண் கீ +:இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப் (Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர
விண் கீ + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.
விண் கீ + Enter : Narrator இயக்கப்படும்.
விண் கீ + E: கம்ப்யூட்டர் (மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.
விண் கீ + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
விண் கீ + U :Ease of Access Center திறக்கப்படும்.
விண் கீ + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.
விண் கீ + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.
விண் கீ +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை, விண் கீ + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.
விண் கீ + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.
விண் கீ + Alt + 1..10:டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.
விண் கீ + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.
விண் கீ + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.
விண் கீ + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.
விண் கீ + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)
விண் கீ + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
விண் கீ + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.
விண் கீ + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.
விண் கீ + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
விண் கீ + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
விண் கீ + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.
விண் கீ + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.
விண் கீ + F1: Windows Help and Support இயக்கப்படும்.
விண் கீ இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Page Up : முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்
Page Down : பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்
Esc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.
Ctrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும்.
Ctrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும்.
0 comments :
Post a Comment