இரு வாரங்களுக்கு முன் மத்திய அரசின் தொலைதொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவு, 3ஜி மொபைல் சேவையினை வழங்கும் நிறுவனங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் கருத்துப்படி, 3ஜி சேவைக்கான உரிமம் வழங்குகையில், ஒரு மண்டலத்தில் இயங்கும் நிறுவனம், இன்னொரு மண்டலத்தில் இயங்கும் சேவை நிறுவனத்துடன் ரோமிங் வசதியைப் பெறும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் தன் வாடிக்கையாளர் களிடமிருந்து கட்டணம் பெறக் கூடாது.
இந்தியாவில் இயங்கும் மொபைல் மண்டலங்கள் அனைத்திலும் செயல்படும் வகையில் எந்த நிறுவனமும் உரிமம் பெறவில்லை.
ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் அதிக பட்ச எண்ணிக்கையாக 13 மண்டலங்களில் 3ஜி சேவை வழங்கும் உரிமையைப் பெற்றுள்ளன.
இதனை அடுத்து, பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரோமிங் வசதியை வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகின்றனர்.
இது உரிமம் சார்ந்த விதிமுறைகளுக்கு முரணானது என்று அரசிடமிருந்து இந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து, பார்தி ஏர்டெல், ஏர்செல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்கு அரசு பெற்ற நிதியைத் திரும்ப அளிக்க வேண்டும் என பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
நிறுவனங்களுக்கு இந்த வகையில் உரிமம் வழங்கிய வகையில் அரசுக்கு ரூ.67,700 கோடி வருமானம் கிடைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2 comments :
பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளனர்...!!!!
நம்பலாமா..:-)
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
அனைவருக்கும் தேவையான தகவல் ! நன்றி நண்பரே !
Post a Comment