விண்டோஸ் இயக்கம் தொடங்கியவுடன், அதில் உள்ள பயனாளர்களின் அக்கவுண்ட் காட்டப்பட்டு அவர்களுக் கான படங்களும் தோன்றும். சிலர் இதில் தங்களின் போட்டோக்களை இணைத்திருப்பார்கள்.
சிலர் எதுவும் இல்லாமல் வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்த வேறு படங்களை அமைத்திருப்பார்கள்.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் சற்று நேரம் இயங்கினால், இதில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று அறியலாம்.
அதில் ஒன்று, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கான அக்கவுண்ட்டில் காட்டப்படும் படங்களை மாற்றுவது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.
ஸ்டார்ட் மெனு சென்று, சர்ச் பீல்டில் கிளிக் செய்து அதில் “User Accounts” என டைப் செய்து என்டர் தட்டவும். இந்த தேடலுக்கான முடிவுகள் கிடைக்கும் பட்டியலில், “manage another account” என ஒரு லிங்க் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய டயலாக் திரை காட்டப்படும்.
இது கண்ட்ரோல் பேனலில் எழுந்து வரும். இதில் எந்த யூசர் அக்கவுண்ட்டிற்கு படத்தினை மாற்ற வேண்டுமோ, அந்த அக்கவுண்ட்டில் டபுள் கிளிக் செய்திடவும்.
அடுத்து, அக்கவுண்ட் எடிட் செய்வதற்கான வழி காட்டப்படும். இதில் Change the picture என்பதில் கிளிக் செய்திடவும். இனி, இன்னொரு புதிய டயலாக் திரை காட்டப்படும்.
இதில் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வரும் மாறா நிலையில் உள்ள படங்கள் காட்டப்படும். இதிலிருந்து ஒரு படத்தினைத் தேர்ந் தெடுக்கலாம். அல்லது பிரவுஸ் செய்து நீங்கள் விரும்பும் படத்தினை, அது வைக்கப்பட்டுள்ள போல்டரிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தை இயக்கினால், மாற்றப்பட்ட படம் அதற்கான யூசர் அக்கவுண்ட்டுடன் காட்டப்படும்.
0 comments :
Post a Comment