பேஸ்புக் இணைய தளத்தில், அதிக அளவில் பயனாளர்களைக் கொண்டுள்ள பட்டி யலில், அமெரிக்காவிற்கு அடுத்த படியாக, இந்தியா இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. இதுவரை இந்தோனேஷியா இரண்டாவது இடத்தைக் கொண்டிருந்தது.
தற்போது இந்தோனேஷியாவின் 4.35 கோடி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் இந்திய பயனாளர்கள் இருப்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை 4.49 கோடி ஆகும்.
இந்தியாவில் இன்டர்நெட் பயன் படுத்துபவர்கள் 10 கோடி எனப் பார்க்கையில், இவர்களில் 44% பேர் பேஸ்புக் தளத்தில் இயங்குகிறார்கள்.
ஒரே ஒரு இணைய தளம் இந்த அளவிற்கு ஒரு நாட்டிலிருந்து வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பது அதற்குப் பெருமை தான்.
இன்டர்நெட் என்றாலே, பேஸ்புக் தான் என்ற அளவிற்கு இந்திய இன்டர்நெட் மக்களிடையே ஒரு இமேஜ் ஏற்பட்டுள்ளது. ட்ரெயின், பஸ் என எதில் பயணம் செய்தாலும், அங்கு யாராவது ஒருவர் பேஸ்புக் தளம் குறித்து பேசுவதனை அறியலாம்.
நண்பர்களுக்கிடையே உரையாடுகையில், ஆம் அவன் இந்த செய்தியை என் பேஸ்புக் தளத்தில் போட்டிருந்தான் என்ற பேச்சைக் கேட்கலாம்.
போகிற போக்கில் இந்தியாவில் இமெயில் எனப்படும் மின்னஞ்சல் பயன்பாட்டினை பேஸ்புக் தளப்பயன்பாடு மிஞ்சிவிடும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவிற்கு எப்படி இரண்டாவது இடம் கிடைத்தது? என்ற கேள்வி எழலாம். சீனாவில் பேஸ்புக் இணைய தளம் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் இந்திய பயனாளர்களின் எண்ணிக்கை பெரியதாக உள்ளது.
120 கோடி ஜனத்தொகையுடனும், இதில் 10 கோடி இணைய பயனாளர்களுடனும், இந்தியா இன்னும் பல தனிச் சிறப்பு பெற்ற இடத்தினைப் பெறும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.
2 comments :
பேஸ்புக் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது...
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
நல்லதிற்கு மட்டும் பயன்பட/பயன்படுத்த வேண்டும் !
Post a Comment