தன்னுடைய கூகுள் ப்ளஸ் மூலம், சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் பேஸ்புக் தளத்திற்கு வழங்கியது கூகுள். இது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும் என்று இத்துறை வல்லுநர் களால் எதிர்பார்க்கப் படுகிறது.
உலகின் மிகப் பெரிய சமூக தளமாக பேஸ்புக் விளங்குகிறது. பெரிய இன்டர்நெட் நிறுவனமாக கூகுள் இயங்குகிறது.
இதில் சமூக தளத்தில் முதல் இடத்தைப் பெற இரண்டிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதன் மூலம் வரும் விளம்பர வருமானத்தை அதிக அளவில் கைப்பற்றவே இந்த போட்டி.
இந்தப் போட்டியில் இதுவரை பேஸ்புக் தளத்தின் கை தான் ஓங்கி உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டில் கூகுள் ப்ளஸ் சரியான போட்டியைத் தரும்.
இதனால், இந்த இரண்டினையும் பயன்படுத்து வோருக்கும் லாபம் தான். பலவிதமான புதிய வசதிகளைத் தந்து தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதுடன், புதிய வாடிக்கையளர் களையும் இழுக்க இவை இரண்டும் முயற்சிக்கும்.
அதே போல, தர்ட் பார்ட்டி என அழைக்கப்படும் பிற நிறுவனங்களும், இந்த இரண்டு தளங்களுக்குமான ஆட் ஆன் தொகுப்புகளைத் தந்து, இந்த சந்தையில் தங்களுக்குமான பங்கினைப் பெற முயற்சிக்கும்.
இந்நிலையில், 2012 முதல் பாதியில், பேஸ்புக் பங்குகளை வெளியிட்டு மூலதன நிதி திரட்டலாம். இது கூகுள் நிறுவனத்துடன் போட்டியிட கூடுதல் சக்தியைத் தரும்.
ஆனால், பங்கு வெளியீட்டிற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அந்த சூழ்நிலை பேஸ்புக் இணைய தளத்தைப் புரட்டிப் போட்டுவிடும்.
கூகுளின் கை ஓங்கிவிடும். எனவே தான் இந்த ஆண்டு இவை இரண்டின் இடையேயான போட்டி பல முனைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 comments :
பயனுள்ள தகவல் ! போட்டியில் வெற்றி, நமக்காக இருந்தால் சரி ! ! நன்றி நண்பரே !
Post a Comment