மொபைல் போன் பயன்பாட்டில் ஏற்படும் அலை வீச்சு குறித்த தகவல்களை மக்களுக்குக் கட்டாயமாக, அவர்கள் மொபைல் போன்கள் வாங்குகையில் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதி வரும் செப்டம்பர் 1 முதல் கடுமையாக அமல்படுத்தப்பட இருக்கிறது.
மனித உடல் கிரஹித்துக் கொள்ளும் ரேடியோ கதிர் அலை வீச்சு 1.6க்குள் இருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படுகிறது.
இதற்கு மேல் அலை வீச்சு உள்ள மொபைல் போன்கள் விற்பனை செய்வது தடை செய்யப்படும். இது ஏறத்தாழ தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு இணையாக உள்ளது.
ஒவ்வொரு மொபைல் போனுக்கான அலைவீச்சு விற்பனை செய்யப்படும்போது மக்கள் அறியும் வகையில் குறிப்பிடப்பட வேண்டும்.
மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் இணைய தளங்களில் தரப்பட வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்படாத மொபைல் போன்கள் விற்பனைக்கு வரக் கூடாது.
பல மொபைல் போன்கள் இந்த விதி முறைக்குட்பட்ட நிலையில் இருப்பதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முறையான நிறுவனப் பெயர்கள் இன்றி, வரியற்ற சந்தையில் விற்பனை செய்யப்படும் பல சீன நாட்டு மொபைல்கள் அபாயத்தைத் தரும் அளவிற்கு கதிர் வீச்சினைக் கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.
இப்போது அரசு இது குறித்து தொடர்ந்து அறிவித்து வருவதால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் முறையற்ற, அதிக கதிர்வீச்சு உள்ள மொபைல்கள் வாங்குவது படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 comments :
பயனுள்ள தகவல் ! மிக்க நன்றி நண்பரே !
தகவலுக்கு நன்றி..
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment