அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும், கம்ப்யூட்டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கின்றனர்.
முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை மாற்றி வேறு சிடி அல்லது டிவிடிக்குக் கொண்டு செல்வதனை ரிப்பிங் என்கிறோம்.
இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் இது பெரும்பாலும் மியூசிக் டேட்டா வினையே குறிக்கிறது. சிடியிலிருந்து இசைப் பாடல்களை வெளியே எடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவதுதான் ரிப்பிங். பொதுவாக இந்த பைல்கள் காப்பி ஆகையில் .wma என்ற பார்மட்டில் காப்பி ஆகும்.
ரிப்பிங் குறித்து தெரிந்து கொண்டால் சிடியிலிருந்து மட்டுமல்ல வேறு மீடியாக்களிலிருந்தும் இன்டர் நெட்டிலிருந்தும் பாடல்களை காப்பி செய்வது எளிதாகும். ரிப்பிங் செய்வதும் எளிதுதான். எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
1. முதலில் இதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 10 அல்லது அதற்குப் பின் வந்தது இருக்க வேண்டும். இதனைத் திறந்து கொள்ளுங்கள். பின் எந்த சிடியிலிருந்து பாடலை ரிப் செய்திட வேண்டுமோ அதனை சிடி டிரைவில் போட்டுவிடவும்.
2. வழக்கம்போல், உடனே சிடியில் உள்ள பாடல்கள் இசைக்கத் தொடங்கும். அவ்வாறு பாடல்கள் இசைக்கப் படவில்லை என்றால் File, Open கிளிக் செய்திடுங்கள். அங்கு “Look in:” என்ற டேப்பின் கீழாக சிடி டிரைவில் உள்ள சிடியைத் தேடுங்கள். எந்த மியூசிக் பைல்களை எல்லாம் ரிப்பிங் செய்திட முடிவு செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இவற்றை இயக்க விண்டோஸ் மீடியா பிளேயரில் Open மீது கிளிக் செய்திடவும்.
3. இப்போது தோன்றும் திரையின் மேலாக ஆறு டேப்கள் கிடைக்கும். அவை: Now Playing, Library, Rip, Burn, Sync and Guide. ஆகும். Now Playing பட்டியலில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் பைல்கள் இருக்கும். Rip டேப்பினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும் இந்த பாடல் பைல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் வேண்டாமே! சில மட்டும் போதும் என்று எண்ணுகிறீர்களா! அதற்கு வழி உள்ளது.
4. ஒவ்வொரு பாடலின் தலைப்புக்குப் பக்கத்தில் ஒரு செக் மார்க் இருக்கும். இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி, சிடியில் உள்ள அனைத்து பாடல்களையும் காப்பி செய்திட விரும்பாவிட்டால், நீங்கள் எந்த எந்த பாடல்களை ரிப்பிங் செய்திட வேண்டுமோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். விருப்பப்பட்ட பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தவுடன் ஸ்கிரீனில் வலது பக்க மூலையில் Rip என்பதில் கிளிக் செய்திடுங்கள். பாடல்கள் ரிப் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவாகும்.
5. இந்த செயல் முடிந்தவுடன் சிடியை எஜெக்ட் செய்து வெளியே எடுக்கவும். நீங்கள் ரிப் செய்த பாடல்கள் அனைத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரின் லைப்ரேரியில் காணப்படும். லைப்ரேரியில் தான் நீங்கள் எந்த நேரமும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கான பாடல்கள் அனைத்தும் இருக்கும்.
6. லைப்ரேரியில் உள்ள பாடல்களை நீங்கள் வழக்கம் போல உங்கள் பிரியப்படி வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். பாடலின் பெயர், பொருள்வகை, மியூசிக் டைரக்டர் என எந்த வகையிலும் வகைப்படுத்தி பைல் செய்து வைத்துக் கொள்ளலாம்.
ஓகே! விண்டோஸ் மீடியா பிளேயர் இல்லாதவர்கள் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? விண்டோஸ் சிஸ்டத்துடன் வந்ததை அழித்து விட்டீர்களா? கவலைப்பட வேண்டாம். http://en.softonic.com/s/freewindowsmediaplayer12 என்ற தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
1 comments :
ohh.....
Post a Comment