புதிய வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கும் பொருட்டு, தங்கள் நிறுவனத்தின் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை வழங்க திட்டமிட்டிருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ( 3ஜி சேவை பிரிவு) உயர் அதிகாரி பிரசாந்த் கோகர்ன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவில், 2013ம் ஆண்டிற்குள், இணையதளத்தில் உலவுபவர்களின் எண்ணிக்கை 8 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால், தற்போதைய அளவில் இந்தியாவில் 8 லட்சம் இணையதளங்களே புழக்கத்தில் உள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த பெரும்பாலும் இணையதளங்களை நாடுகின்றன.
அவர்களுக்கு சேவை செய்யும் விதமாக, தங்கள் நிறுவனம், நெட்கனெக்ட் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்குகிறது.
இந்த பேக்கேஜின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப டொமைன் நேமை பெற்றுக்கொள்ளலாம்.
அதோடுமட்டுமல்லாமல், ஹோஸ்டிங் மற்றும் பிசினஸ் இ-மெயில் அக்கவுண்ட் வசதிகளுடன் கூடிய வெப்சைட்டை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புடன், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நாங்கள் இலவசமாக ஒரு ஆண்டிற்கு வழங்க உள்ளோம்.
இதற்காக, வெப் ஹோஸ்டிங் சேவைகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ள பிக்ராக்குடன் கைகோர்த்துள்ளோம். இதன்மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comments :
நல்ல திட்டம். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment