சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள்

இணையம் உலகத்தைச் சுருக்கி ஒரு சிறிய கிராமமாக மாற்றுகிறது என்றால், அதற்கு இன்றைய நாட்களில் துணை புரிவது, நெட்வொர்க்கிங் சைட்ஸ் (Networking Sites) என அழைக்கப்படும் இணைய சோஷியல் தளங்களே (Social Community Sites).

இந்த தளங்களில் உறுப்பினர் களாகி, மற்ற உறுப்பினர் நண்பர் களுடன் அஞ்சல் பரிமாற்றம், உடனடி அரட்டை, குழுக்கள், நிகழ்வின் அடிப்படையில் குழுக்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள் பரிமாற்றம் என உறவுகள் வலுக்கும் பல வசதிகள் இந்த தளங்களில் கிடைக்கின்றன.

இணையத்தில் வலம் வருபவர்களில் 95% பேர் நிச்சயம் இந்த தளங்கள் மூலம் நண்பர்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இணையத்தில் உள்ள சமுதாய இணைய தளங்கள் குறித்துச் சுருக்கமாக இங்கு காணலாம்.


1. ட்விட்டர் (Twitter):

2006 ஆம் ஆண்டில் ஜாக் டார்சி (Jack Dorsey)என்பவரால் தொடங்கப்பட்டது. எஸ்.எம்.எஸ்.க்குப் பதிலாக இணையம் தரும் மாற்றாக இயங்குகிறது. நிறுவனங்களோ, தனி நபர்களோ, தங்களுக்குள் சிறிய அளவில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.

இதில் அக்கவுண்ட் தொடங்குவது எளிது. முதலில் ஆங்கிலத்தில் தொடங்கினாலும், பின்னர் பிற மொழிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.


2. யு-ட்யூப் (You Tube):

வீடியோ பைல்களை இணையம் மூலமாகப் பகிர்ந்து கொள்ள, கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட முதல் இணைய தளம். "நீங்களாகவே உங்களை ஒளிபரப்பிக் கொள்ளுங்கள்' என்ற இலக்குடன் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இவ்வுலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என, டைம் இதழ் நவம்பர் 2006ல், இந்த தளத்தினை அறிவித்தது. மிக எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். பல அறிவு சார்ந்த தேடல்களுக்கு நல்ல தீனி வழங்கும் தளமாக இது அமைந்துள்ளது. இருப்பினும் சில மோசமான அநாகரிகத் தகவல்களும் இடம் பெற வழி தருகிறது. இதன் சமுதாயத் தணிக்கை சரியானால், நன்றாக இருக்கும்.


3. பேஸ்புக் (Facebook):

ஹார்ட்வேர் பல்கலைக் கழக முன்னாள் மாணவரான மார்க் ஸக்கர் பர்க் (Mark Zuckerberg) என்பவரால் தொடங்கப்பட்டது. மிக அதிகப்படியான எண்ணிக்கையில் வசதிகளைக் கொண்ட சமுதாய இணக்க இணைய தளமாக இது இயங்குகிறது. வெற்றிகரமான ஓர் தளமாக உலகெங்கும் புகழ் பெற்று இது இயங்கி வருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவர் களைத் தேடி அறிந்து அளவளாவவும், ஒரே மாதிரியான சிந்தனை உள்ளவர்களை அறிந்து நண்பர்களாக்கிக் கொள்வதிலும் இந்த தளம் உதவுகிறது. கணக்கற்ற அளவில் போட்டோக்களை அப்லோட் செய்திட உதவுகிறது. மொபைல் போன் வழி தொடர்பும் எளிதாக உள்ளது.


4. ஹி 5 (Hi 5):

இந்திய மண்ணிலிருந்து உதயமான சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். 2003ல் ராமு எலமாஞ்சி என்பவரால் தொடங்கப்பட்டது. 2008ல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட 20 தளங்களில் ஒன்றாக இடம் பெற்றது.

ஒருவருக்கொருவர் நட்பு தேடி, அழைப்புகளை அனுப்பி, அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் தொடரும் உறவுகளால் இந்த தளம் இயங்குகிறது. இதில் நாம் விரும்பும் பாடல்களைக் கேட்க, இந்த தளம் தனக்கென ஒரு மீடியா பிளேயரைக் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.


5. ஆர்குட் (Orkut):

கூகுள் நிறுவனத்தால், 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் ஊழியர் ஆர்குட் என்பவரால் இது வடிவமைக்கப் பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. எனவே அவர் பெயரையே இந்த தளமும் கொண்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் பிரேசில் நாட்டிலும் இது பிரபலமானது. பின்னர் உலகின் அனைத்து நாடுகளிலும் உறுப்பினர்களைக் கொண்டது.

வேவ், பஸ் (Wave, Buzz) போன்ற தளங்கள் தொடங்கப்பட்டு சில காலம் கழித்து நிறுத்தப்பட்டன. இவற்றைப் போலவே, பல சோஷியல் தளங்கள் உருவாகி, அவ்வளவாக ஆதரவு இல்லாமல் அப்படியே முடங்கிப் போய்விட்டன. இன்னும் பல தளங்கள் தோன்றலாம். சில பிரபலமாகலாம். சமூக உறவுகளைப் பலப்படுத்துவதில் சிறப்பான இடம் பெறலாம்.

இந்த தளங்கள் அனைத்தும் புதிய சமுதாய கூடல்களுக்கு இடம் தருகின்றன என்பது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும். இருப்பினும் இந்த தளங்களில் நம் இடத்தைச் சற்று பாதுகாப்புடனே தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகையில், உங்கள் விருப்பங்களையும், விரும்பாதவற்றையும் அழுத்தமாகவே குறிப்பிடவும். நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதைச் சந்தேகத்திடமின்றி விளக்க மாகத் தந்துவிடுங்கள். போட்டோ பதிப்பதாக இருந்தால், உங்களின் இன்றைய போட்டோவினைப் பதிக்கவும்.

இது உங்கள் நண்பர்கள் உங்களை அடையாளம் கண்டு, தொடர்பினைப் புதுப்பிக்க உதவும். பிரைவசி செட்டிங்ஸ் எந்த நிலைகளில் அமைக்கலாம் (‘All’, ‘Friends and Networking’,’Friends of Friends’, ‘just friends’, மற்றும் ‘personalised’) என்பதனை உணர்ந்து அமைக்கவும். எனப் பல நிலைகள் உள்ளன. இவற்றின் விளைவுகளைப் புரிந்து கொண்டு, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கவும்.

நீங்கள் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் எந்த சொல் அல்லது சொல் தொடரையும் இந்த தளங்களில் எங்கும் குறிப்பிட்டு வைக்க வேண்டாம். உங்களை மற்றவர்கள் காண்பதைச் சற்று வரையறைகளுடன் அமைக்கவும்.

உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை யார் பார்க்க வேண்டும் என்பதனைச் சரியாக செட் செய்திடவும். இந்த தளங்களைப் பயன்படுத்து கையில் அதீத கவனம் தேவை. இல்லை எனில் மற்றவர்கள் கைகளில் பட்டு, சிதறிவிடுவீர்கள்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes