இன்டர்நெட் தளங்களிலிருந்து பைல்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், டவுண்லோட் செய்திடும் முன் அந்த பைல் அளவு என்ன என்று காட்டப்படுவதில்லை.
டவுண்லோட் செய்திடும்போது மட்டுமே, அந்த பைல் டவுண்லோட் செய்திட எவ்வளவு நேரம் ஆகும் என்று காட்டப்படும். அதுவும் டவுண்லோட் செய்திடுகையில், இணைப்பின் வேகம் கூடும்போது குறைவாகக் காட்டும்.
மேலும் பைலின் இந்த அளவில், இந்த அளவு டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று காட்டப்படும். ஆனால் நமக்கு டவுண்லோட் ஆகும் முன் பைலின் அளவு தெரிந்தால், அது தேவையா என முடிவு செய்வதற்கு வசதியாக இருக்கும்.
இந்த வசதியினை இலவச புரோகிராம் ஒன்று தருகிறது. அந்த புரோகிராம் பெயர் Get File Size. இந்த புரோகிராமினைhttp://www.unhsolutions. net/GetFileSize/index.html என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் .
செய்தபின், நீங்கள் டவுண்லோட் செய்திட வேண்டிய பைலின் லிங்க் சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். அப்போது கிடைக்கும் மெனுவில் "Get File Size" என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்தால் அந்த பைலின் அளவு மட்டுமின்றி, அந்த பைல் எப்போது அப்லோட் செய்யப்பட்டது, டவுண்லோட் ஆனால் அதன் அளவு எவ்வளவு இருக்கும், எவ்வளவு நேரம் ஆகும் என்ற தகவல்கள் கிடைக்கும்.
ஏற்கனவே நீங்கள் டவுண்லோட் மேனேஜர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்திக் கொண்டிருந் தாலும் கவலைப் பட வேண்டாம். இந்த புரோகிராம் அதற்கு மாற்று கிடையாது. இந்த புரோகிராமில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது.
இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே செயல்படுகிறது. இதன் தளத்தில் இந்த புரோகிராம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் வரை உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment