அருமையான பல வசதிகளுடன் கூடிய குவெர்ட்டி கீ போர்டு மற்றும் ட்ரேக் பால் கொண்ட இரண்டு சிம் மொபைல் போன் ஒன்றை க்யூ5 என்ற பெயரில் மைக்ரோமாக்ஸ் நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.
இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களுடம் இது இயங்குகிறது. 2.2 அங்குல வண்ணத்திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ ரெகார்டிங், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், அ2ஈக இணைந்த புளுடூத், ஆப்பரா மினி பிரவுசர், இன்டர்நெட் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் வாப் தொழில்நுட்பம் ஆகியன தரப்பட்டுள்ளன.
இதன் நினைவகம் 15 எம்பி. இதனை மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகமாக்கலாம். MP3, AMR, MIDI மற்றும் WAV பார்மட்களில் உள்ள பாடல்களை மியூசிக் பிளேயர் இயக்குகிறது.
நேரத்தை செட் செய்து இயக்கவும் பதியவும் கூடிய எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. ஐந்து மணி நேரம் தொடர்ந்து பேசவும், 180 மணி நேரம் தாக்குப் பிடிக்கவும் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.5,100
0 comments :
Post a Comment