சென்ற டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் மொபைல் புதிய இணைப்பு வழங்குவதில் டாட்டா டெலிசர்வீசஸ் முதல் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக, முதல் இடத்தைப் பெற்றுள்ளது. டிசம்பரில் 33 லட்சம் சிம்கார்டுகளை வழங்கியுள்ளது. இத்துடன் இந்நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை 5 கோடியே 70 லட்சத்தைத் தாண்டி யுள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல். இதுவரை கொண்டிருந்த ஐந்தாவது இடத்திற்கு டாட்டா டெலிசர்வீசஸ் வந்துள்ளது. டிசம்பரில் பார்தி ஏர்டெல் 28 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் இந்நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 11 கோடியே 88 லட்சமாகும். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வோடபோன் எஸ்ஸார், ஐடியா செல்லுலர், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மொபைல் இணைப்பு: டாடா முன்னிலை
ரிலையன்ஸ் மொபைல் புதிய சலுகை
இரவு நேரங்களில் இலவசமாகப் பேசுவதற்கென இரண்டு புதிய திட்டங்களை ரிலையன்ஸ் மொபைல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதன் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பு இரண்டுக்கும் பொருந்தும்.
ரூ.29க்குக் கிடைக்கும் லைட் நைட் பேக் மூலம் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை எந்த ரிலையன்ஸ் லோக்கல் போனுக்கும் இலவசமாகப் பேசலாம். ரூ.59க்குக் கிடைக்கும் பிரைட் நைட் பேக் மூலம் அதே நேரத்தில் எஸ்.டி.டி மற்றும் உள்ளூர் அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ளலாம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment