நெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய

இணையத்தைப் பயன்படுத்தும் போது, நம் இணைப்பிற்கென ஓர் ஐ.பி. முகவரி தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும். 

ஒவ்வொரு நேரமும் ஒரு முகவரி தரப்படுவதால், சில செயல்பாடுகளுக்காக, அந்த நேரத்தில் தரப்படும் ஐ.பி. முகவரி அறியவும் ஆசைப்படுவோம். அதனை எப்படி அறியலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அறிவது என்பதனை முதலில் காண்போம்.


முதல் வழி, விண்டோஸ் இயக்க முறையில் கிளிக் செய்து பெறுவது.

1. முதலில் "Network Sharing Center' என்பதனைத் திறந்து கொள்ளவும். உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம் ட்ரேயில், நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து, "Open Network and Sharing Center' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

அல்லது, ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கிடைக்கும் தேடல் கட்டத்தில், network and sharing center என டைப் செய்திடவும். இதற்கான லிங்க் கிடைத்தவுடன், அதில் கிளிக் செய்திடவும். 

2. இப்போது "Network and Sharing Center' கிடைக்கும். இங்கு "Local Area Connection' என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது, உங்கள் இணைய இணைப்பிற்கு ஒரு பெயரினைக் கொடுத்திருந்தால், "View your active networks' என்பதன் கீழாக அது காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.

3. "Status' என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகையில், "Details' என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து, "Network Connection Details' என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். 

இதில் அப்போதைய இணைப்பிற்கான ஐ.பி. முகவரியும், அதன் தொடர்பான தகவல்களும் கிடைக்கும். இந்த தகவல்களில், நீங்கள் பெற்றிருக்கும் இணைப்பின் காலம், காலம் காலாவதியாகும் நாள், சேவை நிறுவன முகவரி, சர்வரின் முகவரி ஆகியவை, உங்களுக்குச் சேவை வழங்கும் நிறுவனம் தந்திருப்பின், காட்டப்படும்.

இரண்டாவதாக, டாஸ் கட்டத்தில் கட்டளைகளை அமைத்து இயக்கிப் பெறுவது.

1. ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்திடவும்.

2. இங்கு cmd /c ipconfig & pause என டைப் செய்து எண்டர் தட்டவும்.

இது, டாஸ் கட்டளைப் புள்ளி ஒன்றைக் காட்டும். நாம் கேட்ட தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கும். ஏதேனும் ஒரு கீயை அழுத்தினால், இந்த டாஸ் கட்டம் மூடப்படும். 

மேலே சொன்னபடி, நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படின், cmd /c ipconfig /all & pauseஎன கட்டளை அமைத்து எண்டர் தட்டவும். 

நேரடியாக டாஸ் கட்டம் பெற்று, தேவையான தகவல்களைப் பெற ipconfig or ipconfig/all என்றபடியும் கட்டளைகளை அமைத்துப் பெறலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes