ஷிப்ட் கீயும் மவுஸ் கிளிக்கும்

அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. 

நாம், இந்த வசதிகளை முழுமையாக அறியாமல், சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்துகிறோம். இங்கு மவுஸ் பயன்படுத்தி, நாம் ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கலாம். இதன் மூலம் நாம் நம்முடைய வேலைப் பயன்களைப் பல மடங்காக்கலாம்.



ஷிப்ட் கீ + மவுஸ் கிளிக்: 

அனைத்து டெக்ஸ்ட் எடிட்டர்கள் மற்றும் புரோகிராம்கள், அனைத்து டெக்ஸ்ட் அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் பகுதியினை ஷிப்ட் கீ மற்றும் மவுஸ் இணைத்துப் பயன்படுத்தி ஹைலைட் செய்வதனை அனுமதிக்கின்றன. 

எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் ஒன்றின் பாரா தொடக்கத்தில், கர்சரைக் கொண்டு சென்று, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, பாராவின் இறுதி நிலையில், கிளிக் செய்தால், பாரா முழுவதும் ஹை லைட் செய்யப்படும்.

இதில் இன்னொரு வழியும் உள்ளது. டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றில், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால், டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டின் பாரா, நெட்டு பத்தியாக இருந்தால், இந்த கீ செயல்பாடு பயன் தரும்.




ஸ்குரோல் வீலின் பயன்கள்: 

நாம் எல்லாரும், மவுஸ் வீலைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் பக்கம் ஒன்றில், மேலும் கீழுமாகப் போகும் வழியினைத் தெரிந்து வைத்திருப்போம். மவுஸ் வீலைக் கொண்டு மேலும் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். 

மவுஸ் வீல், வீல் மட்டுமல்ல. அது ஒரு பட்டனாகவும் செயல்படும். இதனை அழுத்தினால், மவுஸின் மூன்றாவது பட்டனாகச் செயல்படும். இதன் மூலம் ஒரு டேப் அல்லது லிங்க்கில் கிளிக் செய்து, இணையதளப் பக்கம் ஒன்றைத் திறக்கலாம். திறந்திருக்கும் டேப் மீது வீலை அழுத்தினால், அந்த இணையப் பக்கம் மூடப்படும்.

பிரவுசர் ஒன்றில், மேலும் கீழுமாகச் செல்கையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு செயல்பட்டால், இணையப் பக்கங்கள் ஊடாக, இன்னும் சற்று வேகமாகச் செல்ல முடியும். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலை மேலாக ஸ்குரோல் செய்தால், பக்கமானது ஸூம் செய்யப்படும். கீழாக ஸ்குரோல் செய்தால், பக்கம் ஸூம் அவுட் செய்யப்படும். 

இணையத்தில் உலா வருகையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், முன்னும் பின்னுமாகச் செல்ல முடியும். பின்னால் ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்கள் கீழாகவும். 

முன்னால் ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்கள் மேலாகவும் செல்லலாம். சில மவுஸ் வீல்களை இடது அல்லது வலதாக அழுத்திச் சென்று, இணையப் பக்கத்தின் முன், பின்னாகச் செல்லலாம்.


1 comments :

கலியபெருமாள் புதுச்சேரி at October 5, 2013 at 9:40 PM said...

எனக்கு எல்லாமே புதிய தகவல்கள்..நன்றி..

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes