கூகுள் வீடியோ நிறுத்தம்

கூகுள் வீடியோ நிறுத்தப்படுகிறது என்றவுடன், கூகுள் நிறுவனத்தின் யுட்யூப் சேவை நிறுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறதா? அதுதான் இல்லை.

கூகுள் நிறுவனம் முதலில் கூகுள் வீடியோ என்ற சேவையைத் தொடங்கி நடத்தியது. பின்னரே, யுட்யூப் சேவைத் தளத்தை வாங்கி தன்னுடையதாக்கிக் கொண்டது.

ஆனால் இரண்டு சேவைத் தளங்களும் இயங்கி வந்தன. அதிகம் பிரபலமாகாத கூகுள் வீடியோ வரும் ஆகஸ்ட் மாதத்துடன் மூடப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில், கூகுள் வீடியோ தொடங்கப்பட்டது. தங்களுடைய வீடியோ படங்களை இணையத்தில் தேக்கி வைத்திட, சர்வர் இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் இது தொடங்கப்பட்டது.

ஆனால், ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடியோ பார்க்க முயற்சிக்கையில், அதன் சர்வர் தள்ளாடியது. அதனால், ஈடு கொடுக்க இயலவில்லை. அடுத்த ஆண்டிலேயே தனக்குப் போட்டியாக இயங்கி வந்த யுட்யூப் தளத்தை, கூகுள் வாங்கியது.

கூகுள் வீடியோ தளத்தினை சீரமைக்க கூகுள் எடுத்த நடவடிக்கைகள் பலனற்றுப் போயின.

இதனால், 2009 ஆம் ஆண்டு முதல், வீடியோ கிளிப் பைல்கள் அப்லோட் செய்வது அனுமதிக்கப்படவில்லை. இப்போது ஆகஸ்ட் 20 முதல் இத்தளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே தங்கள் வீடியோக்களை அப்லோட் செய்தவர்கள், அவற்றை யுட்யூப் தளத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்; அல்லது தங்கள் கம்ப்யூட்டரில் இறக்கிப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 20க்குப் பின்னர், கூகுள் வீடியோ தளத்தில் உள்ள வீடியோ பைல்களை, கூகுள் நிறுவனமே யுட்யூப் தளத்திற்கு மாற்றிவிடும்.

இதே போல தன்னுடைய ஐ கூகுள் சேவையினையும், கூகுள் மூடுகிறது. தனி நபர்கள் தங்களுக்கென ஒரு தளத்தை அமைத்து இயங்க இந்த சேவையினை கூகுள் வழங்கியது.

தற்போது இது போல பல தளங்கள் கூடுதல் வசதிகளுடன் இயங்குவதால், இதனையும் மூடுகிறது. இதே போன்ற காரணங்களுக்காக, சிம்பியன் சர்ச் அப்ளிகேஷன், கூகுள் மினி மற்றும் கூகுள் டாக் சேட் பேக் ஆகிய வசதிகளும் மூடப்படுவதாக, கூகுள் அறிவித்துள்ளது.


2 comments :

திண்டுக்கல் தனபாலன் at July 20, 2012 at 6:21 AM said...

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே ! தொடருங்கள்...

”தளிர் சுரேஷ்” at July 20, 2012 at 5:05 PM said...

தகவலுக்கு நன்றி!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes