வரும் அக்டோபர் 26ல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தனியாக வழங்கப்பட மாட்டாது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் வழியாகக் கம்ப்யூட்டர்களில் பதிந்தே வெளியிடப்படும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.
அதனை மற்ற மதர்போர்டு உள்ள கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.
ஏற்கனவே உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டாலர் செலுத்திய பின்னர், உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.
முதல் முறையாக இரு வேறு வகை கம்ப்யூட்டர் சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது. டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
2011ல் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும்; யு.எஸ்.பி. 3 கிடைக்கும்; விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்;
யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
1 comments :
நல்ல தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே ...
Post a Comment