MP3 பிளேயர் தரும் ஆபத்து

வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது, இசையை ரசிக்க, அனைவரும் அதற்கு மாறினர். மிகத் துல்லிதமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால், பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர்.

ஆனால், இது வேறு சில பிரச்னைகளைத் தருவதாக, டெல் அவிவ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எம்பி3 பிளேயரை, ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர் களுக்கு, மிக இளம் வயதிலேயே காது கேட் கும் திறன் படிப்படியாக குறையத் தொடங் குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

தற்போது நால்வரில் ஒருவருக்கு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எம்பி3 பிளேயர் மட்டு மின்றி, தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஐ-பாட் மியூசிக் பிளேயர் பயன் படுத்துபவர்களின் கதியும் இதே தான் என வும் கூறி உள்ளனர்.

இதனால், இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து, ஒரு சந்ததியே செவிகளின் கேட்புத் திறன் குறைவாக உள்ளதாக அமைந்துவிடும் என்றும் எச்சரித்து உள்ளனர்.

அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்பதனால், தொடர்ந்து தாங்க முடியாத அளவிற்கு ஒலி அலைகள் காதுகள் வழியாக மூளைக்குப் பயணமாகின்றன. இவை ஏற்படுத்தும் தீய விளைவுகளை, உடனடி யாக நாம் அறிய முடிவதில்லை.

படிப் படியாக அவை நம் கேட்கும் திறனைக் குறைக்கின்றன. தெரிய வரும்போது இதற்கான தீர்வு கிடைப்பதில்லை. வளரும் இந்த தீய பழக்கம் குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் களுக்கு அறிவித்தால் நல்லது.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at April 3, 2012 at 4:49 PM said...

நல்ல பதிவு ! நன்றி நண்பரே ! வாழ்த்துக்கள் !

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes