இரைச்சல் நிறைந்த கடை வீதிகள், பஸ், ட்ரெயினில் பயணங்களில், நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் நமக்குக் கேட்பதில்லை. மதிய உணவிற்குப் பின்னர், சிறியதாக உறங்கும் போதும் இந்த அழைப்புகள் நம் கவனத்திற்கு வராது.
இந்த பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நோக்கியா புதிய தொழில் நுட்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. டாட்டூ ஒன்றை உடலில் ஒட்டி, அதன் மூலம் போனுக்கு வரும் அழைப்புகளை அறிந்து கொள்ள இந்த தொழில் நுட்பம் உதவுகிறது.
உடம்பில் ஒட்டப்பட்டுள்ள டாட்டூ, நமக்கு மொபைலில் அழைப்பு வந்தால், அதிர்ந்து நமக்கு அந்த அதிர்ச்சி மூலம் தெரிவிக்கும்.
அதே போல போனின் பேட்டரி மிகவும் குறைவான நிலையை அடைந்துவிட்டாலும், இதே போல நமக்கு அறிவிக்கும். நோக்கியா நிறுவனம் அண்மையில் தான் வடிவமைத்துள்ள இந்த தொழில் நுட்பத்திற்கான உரிமையினைப் பதிவு செய்திட விண்ணப்பம் அளித்துள்ளது.
இந்த டாட்டூவில் ஒருவகையான உலோகக் கலப்பு பயன்படுத்தப்படுகிறது. இது மொபைல் அழைப்பு வரும்போதும், பேட்டரி சக்தி குறைந்த நிலையை அடையும்போதும், ஒருவிதமான கிச்சு கிச்சு உணர்வை அளிக்கும்.
இதனைக் கொண்டிருப்பவர் டாட்டூவைத் தேய்த்து இந்த கிச்சு கிச்சு உணர்வினை நிறுத்த வேண்டும்.
இந்த உணர்வின் நிகழ்வின் நேரத்தை வேறுபடுத்துவதன் மூலம், வந்திருப்பது எஸ்.எம்.எஸ். அல்லது அழைப்பு என ஒருவர் அறிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்குhttp://dvice.com/archives/2012/03/nokiaseekspat.php என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.
1 comments :
பயனுள்ள செய்தி...
Post a Comment