2010ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் இந்தியாவில் விற்கப்பட்ட மொத்த மொபைல் போன்களில் 70 சதவீதம் மொபைல்கள் நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனத்துடையதாகும்.
வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்து விற்பனையில் முன்னணி இடத்தை இவ்விரு நிறுவனங்களும் பெற்றுள்ளன.
இவற்றில் நோக்கியா நிறுவனம் 49.2 சதவீதத்தையும், சாம்சங் 20.5 சதவீதத்தையும் விற்பனை செய்துள்ளன.
மேலும் எல்.ஜி., நிறுவன போன்கள் 5.3 சதவீதமும், மைக்ரோமேக்ஸ் மொபைல்கள் 5 சதவீதமும் விற்பனையாகி உள்ளன.
வாடிக்கையாளர்களை பெரிதும் கவர நோக்கியா நிறுவனம் சமீபத்தில் ட்யூயள் சிம், டச் ஸ்கிரீன் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடனான மாடல்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
2010ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 155.9 மில்லியன் மொபைல் போன்களை நோக்கியா விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment