வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளை உருவாக்கி வரும் சைமாண்டெக் நிறுவனம், அண்மையில் எச்சரிக்கை ஒன்றின, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கியுள்ளது. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை, நம் கம்ப்யூட்டர்களுக்குள் தள்ளுபவர்கள், புதிய உத்தி ஒன்றினைக் கையாள்கின்றனர்.
இதன்படி, நாம் ஏதேனும் ஓர் இணைய தளத்தில் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கையில், திடீரென ஒரு பாப் அப் செய்திக் கட்டம் தோன்றி, நம் கம்ப்யூட்டரில் உள்ள ஏதேனும் சாப்ட்வேர் தொகுப்பு, எடுத்துக் காட்டாக, வி.எல்.சி. மீடியா பிளேயர், எம்.எஸ். விண்டோஸ் மூவி பிளேயர், விண் ஆம்ப், ஒன்றிற்கு லேட்டஸ் அப்டேட் இருப்பதாகவும், அதனைக் கொண்டு அப்டேட் செய்தால் தான், மேற்கொண்டு இயங்க முடியும் எனச் செய்தி கொடுக்கப்பட்டு, அதற்காக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நிறுவனத்தின் தளம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவோம். அது அந்நிறுவனத்தின் தளம் போலவே, அமைக்கப்பட்ட தளமாக இருக்கும். ஆனால் அங்கிருந்து டவுண்லோட் செய்யப்படும் சாப்ட்வேர், மால்வேர் புரோகிராம்களாக இருக்கும்.
சைமாண்டெக் நிறுவனம், இந்த அறிவிப்பினைத் தந்த தளத்தில், நான்கு இணையதளங்களின் படங்களைக் காட்டியுள்ளது.
ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும், இந்த தளங்களில் ஒன்று மட்டுமே உண்மையான தளத்தின் தோற்றமாகும். மற்றவை அனைத்தும் மால்வேர் புரோகிராம் உள்ள தளங்களாகும்.
இதில் இன்னும் மோசமாக ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். அப்டேட் செய்திடச் சொல்லி பாப் அப் வருகையில், நாம் அந்த லிங்க்கில் கிளிக் செய்திடாமல், விட்டுவிட்டால், மிக மிக மோசமான தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். அங்கு மிக மோசமான புரோகிராம்களால், நம் கம்ப்யூட்டர் சூழப்படும்.
இது போன்ற சூழ்நிலைகளில் சிக்குகையில், 1. உடனே உங்கள் பிரவுசரை மூடவும்.
2. அடுத்தபடியாக, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனரைப் பயன்படுத்தி வைரஸ் சோதனை செய்திடவும்.
3. ஏதேனும் மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான சாப்ட்வேர் பதியப்பட்டிருந்தால், அதனையும் பயன்படுத்தவும்.
4. இத்தனையும் பயன்படுத்திய பின்னர், வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் இருப்பதாகத் தெரிந்தால், உடனே அதனை நீக்கும் நடவடிக்கையில் இறங்கவும்.
சில சுருக்குவழிகள்
வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Downஅழுத்தவும்.
0 comments :
Post a Comment