வரும் அக்டோபர் 26 அன்று, மேக் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கான தன் ஆபீஸ் 2011 தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட உள்ளது.
2008 ஜனவரிக்குப் பின்னர், மேக் சிஸ்டத்திற்கென எந்த ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் இந்த தொகுப்பு வெளிவருகிறது.
இந்த தொகுப்பு ஏறத்தாழ எம்.எஸ்.ஆபீஸ் 2010 போலவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசுவல் பேசிக் அடிப்படையில் அமைந்த மேக்ரோ அமைக்கும் வசதி, பெயர் மாற்றப்பட்ட ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், முழுத்திரை வசதி, பிரசன்டேஷன் அல்லது டாகுமெண்ட்டைக் காட்ட டைனமிக் ரீ ஆர்டர் வசதி, வேகமான தொடக்கம் ஆகிய புதிய வசதிகள் தரப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான ஹோம் மற்றும் மாணவர் தொகுப்பில், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் இணைக்கப் பட்டுள்ளது. ஹோம் மற்றும் பிசினஸ் பதிப்பில், அவுட்லுக் இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான அகடமிக் பதிப்பு ஒன்றையும் மைக்ரோசாப்ட் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment