மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைமனைத் தளத்திற்குப் பதிலாக, வேர்ட் ப்ரெஸ் தளத்தை எடுத்துக் கொண்டுள்ளது.
இதுவரை மைக்ரோசாப்ட் லைவ் ஸ்பேஸஸ் (Microsoft Live Spaces) என்ற தளம் வலைமனை என்று அழைக்கப்படும் பிளாக்குகளை அமைக்க, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏறத்தாழ 3 கோடி பேர்,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லைவ் ஸ்பேஸஸ் பிளாக்கிங் தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மாறுதல் இவர்களுக்கு ஓர் அதிர்ச்சியைத் தந்தாலும், வேர்ட் ப்ரெஸ் மூலம் இவர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கும். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், மிக எளிதாக மாறும் வகையில், லைவ் ஸ்பேஸ் பயன்படுத்தி வந்தவர்களுக்கு ஒரு வழி காட்டப்படும் என்றார்.
இந்த மாற்றத்தை விரைவில் ஒவ்வொருவரும் மேற்கொள் வது நல்லது. இப்போது லைவ் ஸ்பேஸ் சென்றால், உடனே இந்த மாற்றம் குறித்துத் தெரிவிக்கப்பட்டு, உங்களுடைய ஆப்ஷன் என்னவென்று கேட்கும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
இதில் என்ன பிரச்னை என்றால், கேட்கப்படும் ஆப்ஷனில், நீங்கள் தொடர்ந்து லைவ்ஸ்பேஸ் பயன்படுத்த ஆப்ஷன் தரப்படவில்லை. இனி விண்டோஸ் லைவ் ரைட்டருக்கான மாறா நிலையில் உள்ள பிளாக்கிங் தளமாக, வேர்ட் ப்ரெஸ் இருக்கும்.
இது குறித்து மைக்ரோசாப்ட் வலைமனை ஒன்றில், வேர்ட் ப்ரெஸ் செயல்படுவது மிகச் சிறப்பாக உள்ளது என்றும், அதனாலேயே இந்த மாற்றத்தினை மைக்ரோசாப்ட் மேற்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றாகவும் மிகச் சிறப்பாகவும் வேர்ட் ப்ரெஸ் செயல்படுகிறது என்றால், அதனுடன் இயைந்து போவதே நல்லது என மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
0 comments :
Post a Comment